கனடா வாழ் உசன் மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வழங்கும் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 2014 மிகச் சிறப்பாக நடைபெற்றது . சங்கத்தின் தலைவர் கனகசபை நகுலன் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில், உசன் மக்களுக்காகத் தமது வீட்டை உவந்தளித்த, பண்டிதர் சரவணமுத்து அவர்களின் மகள், திரு. திருமதி சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்களும், திருமதி சின்னத்தங்கம் சரவணமுத்து அவர்களும் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் அறிக்கை, பொருளாளர் கணக்கறிக்கை ஆகியன பொதுச்சபைக்கு வழங்கப்பட்டன.
பிரதம விருந்தினர் உரை வழங்கிய திருமதி சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்கள் உசன் அபிவிருத்திக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய முன்வந்ததுடன் கனடா வாழ் இளம் சமுதாயத்துக்கு தனது அனுபவத்துடனான அறிவுரை வழங்கினார். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் பொருளாளர் பிரியலதா கேதீஸ்வரனிடம் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத் தேவைகளுக்காக நன்கொடையையும் அவர் வழங்கினார்.
நிறைவாக சங்கத்தின் எதிர்கால திட்டங்களை மக்களுக்கு அறிவித்ததுடன் அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் நாடப்பட்டது.
இந்த நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற அனுசரணை வழங்கியவர்கள்:
Royal Brokerage - சிவா கந்தையா
White Hourse Travels -மகேந்திரன்
Video Maruthy-வேல் கிருபா
JBN Auto Sales-கருணா விநாசித்தம்பி
Vijayaruban Oppilamani-Usan
Pathmakanthan Saravanamuthu - உபதலைவர் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்