Sunday, September 21, 2014
உற்சாகமாக ஆரம்பமாகிய உசன் மக்களின் "பூப்பந்து பயிற்சி "
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அடுத்த முயற்சியாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலான பூப்பந்து (Badminton) பயிற்சி கடந்தவாரம் ஆரம்பமாகியது. Scarborough நகரில் Markham Road மற்றும் Elson Street சந்திக்கருகில் 18 Coxworth Ave, Markham என்ற முகவரியில் உள்ள Parkland Public School ல் ஆரம்பமாகிய பயற்சியில் சிறுவர்கள், பெரியோர்கள், இளையவர்கள் என பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அனுமதி பெற்ற பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் உடல் பயிற்சியுடன், பூபந்து பயிற்சியும் வழங்கினர். மிக குறைந்த கட்டணத்துடன் உசன் மக்களுக்கு வழங்கும் சேவையாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் இன்னும் 15 இடங்கள் உள்ளன. எதிர்வரும் வாரத்துக்கிடையில் உசன் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் ஏனையவர்களும் இந்தப் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். எனவே நீங்களும் இந்த சந்தர்ப்பத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் .
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறும் இந்தப் பயிற்சி நெறியில் 6 வயதுக்கு மேற்பட்ட யாரும் வயது வேறுபாடின்றிப் பங்குபற்ற முடியும்.
இடம்: Parkland Public School
18 Coxworth Ave, Markham, ON, Canada.
பதிவுகளுக்கு:
1. சிவா நவரத்தினம் (விளையாட்டு துறை நிர்வாகி - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா): 416-908-6919
2. உமா இராஜரத்தினம் (பூபந்து பயிற்சி நிர்வாகம் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா): 647-869-2441
Anonymous
|
|
Monday, September 15, 2014
கனடா ஒன்றியம் வழங்கும் "பூப்பந்து பயிற்சி"
கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் தனது அடுத்த கட்ட சேவையாக கனடா வாழ் உசன் மக்கள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கு , பூப்பந்து (Badminton ) பயிற்சி நெறி சேவையை வழங்கவுள்ளது ,
கனடா வாழ் உசன் மக்களின் இளம் சமுதாயத்தினரின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாகவும் , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் விளையாட்டு துறையை வளர்க்கும் முகமாகவும் , உடல் உள ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திறமைமிக்க அங்கீகாரம் பெற்ற பயிட்சியாளர்கள் மூலம் இந்த வகுப்புக்கள் நடைபெறவுள்ளது .
ஒவொரு வரமும் செவ்வாய்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறும் இந்த பயிற்சி நெறியில் , 6 வயதுக்கு மேற்பட்ட யாரும் வயது வேறுபாடின்றி பங்குபற்ற முடியும் .
இடம் : Parkland Public School
18 Coxworth ave, Markham
L3S-3B8
Markham road and Eloson சந்திப்பில்
இது ஒரு முதல் கட்டமே வேறு இடத்தில் உறுப்பினர்கள் சேருமிடத்தில் இடம் விரிவுபடுத்தப்படும் ,
இந்த இடத்தில் வெறும் 30 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு எனவே உங்கள் பெயர்களை எதிர்வரும் 19 ம் திகதி வெள்ளிகிழமைக்கு முன்பாக பதிவு செய்யவும் ,
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உடல் உள நலத்துடன் பயிற்சி பெற சந்தர்ப்பத்தை தவற விடாமல் விரைவாக அழைத்து உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள் ,
வருடம் தோறும் போட்டி நடத்தப்பட்டு கேடையங்கள் வழங்கப்படும் ,தகுதி பெறும் வெற்றியாளர்களுக்கு எதிர்வரும் 2015 ம் ஆண்டு
லண்டனில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழர் பூபந்து போட்டியில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் பெற்று கொடுக்கப்படும் . உங்கள் ஆதரவும் பங்களிப்பும் எமது முயற்சிக்கு உந்து சக்தியாக அமையும் .
பதிவுகளுக்கு :
1. சிவா நவரத்தினம் :416-908-6919
(விளையாட்டு துறை நிர்வாகி - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா )
2. உமா இராஜரத்தினம் -647-869-2441
(பூபந்து பயிற்சி நிர்வாகம் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா )
3. பாஸ்கரன் சுப்பிரமணியம் -647-448-7434
(செயலாளர் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா )
கனடா வாழ் உசன் மக்களின் இளம் சமுதாயத்தினரின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாகவும் , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் விளையாட்டு துறையை வளர்க்கும் முகமாகவும் , உடல் உள ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திறமைமிக்க அங்கீகாரம் பெற்ற பயிட்சியாளர்கள் மூலம் இந்த வகுப்புக்கள் நடைபெறவுள்ளது .
இடம் : Parkland Public School
18 Coxworth ave, Markham
L3S-3B8
Markham road and Eloson சந்திப்பில்
இது ஒரு முதல் கட்டமே வேறு இடத்தில் உறுப்பினர்கள் சேருமிடத்தில் இடம் விரிவுபடுத்தப்படும் ,
இந்த இடத்தில் வெறும் 30 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு எனவே உங்கள் பெயர்களை எதிர்வரும் 19 ம் திகதி வெள்ளிகிழமைக்கு முன்பாக பதிவு செய்யவும் ,
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உடல் உள நலத்துடன் பயிற்சி பெற சந்தர்ப்பத்தை தவற விடாமல் விரைவாக அழைத்து உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள் ,
வருடம் தோறும் போட்டி நடத்தப்பட்டு கேடையங்கள் வழங்கப்படும் ,தகுதி பெறும் வெற்றியாளர்களுக்கு எதிர்வரும் 2015 ம் ஆண்டு
லண்டனில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழர் பூபந்து போட்டியில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் பெற்று கொடுக்கப்படும் . உங்கள் ஆதரவும் பங்களிப்பும் எமது முயற்சிக்கு உந்து சக்தியாக அமையும் .
பதிவுகளுக்கு :
1. சிவா நவரத்தினம் :416-908-6919
(விளையாட்டு துறை நிர்வாகி - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா )
2. உமா இராஜரத்தினம் -647-869-2441
(பூபந்து பயிற்சி நிர்வாகம் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா )
3. பாஸ்கரன் சுப்பிரமணியம் -647-448-7434
(செயலாளர் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா )
Anonymous
|
|
Thursday, September 4, 2014
சிறப்பாக நடைபெற்ற கனடா வாழ் உசன் மக்கள் ஒன்றுகூடல் 2014
கனடா வாழ் உசன் மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வழங்கும் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 2014 மிகச் சிறப்பாக நடைபெற்றது . சங்கத்தின் தலைவர் கனகசபை நகுலன் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில், உசன் மக்களுக்காகத் தமது வீட்டை உவந்தளித்த, பண்டிதர் சரவணமுத்து அவர்களின் மகள், திரு. திருமதி சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்களும், திருமதி சின்னத்தங்கம் சரவணமுத்து அவர்களும் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் அறிக்கை, பொருளாளர் கணக்கறிக்கை ஆகியன பொதுச்சபைக்கு வழங்கப்பட்டன.
பிரதம விருந்தினர் உரை வழங்கிய திருமதி சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்கள் உசன் அபிவிருத்திக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய முன்வந்ததுடன் கனடா வாழ் இளம் சமுதாயத்துக்கு தனது அனுபவத்துடனான அறிவுரை வழங்கினார். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் பொருளாளர் பிரியலதா கேதீஸ்வரனிடம் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத் தேவைகளுக்காக நன்கொடையையும் அவர் வழங்கினார்.
நிறைவாக சங்கத்தின் எதிர்கால திட்டங்களை மக்களுக்கு அறிவித்ததுடன் அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் நாடப்பட்டது.
இந்த நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற அனுசரணை வழங்கியவர்கள்:
Royal Brokerage - சிவா கந்தையா
White Hourse Travels -மகேந்திரன்
Video Maruthy-வேல் கிருபா
JBN Auto Sales-கருணா விநாசித்தம்பி
Vijayaruban Oppilamani-Usan
Pathmakanthan Saravanamuthu - உபதலைவர் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
Anonymous
|
|
Subscribe to:
Posts (Atom)