உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தக் கோடை கால ஒன்றுகூடல் எதிர்வரும் August 31, 2014 அன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது. வழமைபோல Neilson and finch ,Scarborough, Canada வில் அமைந்திருக்கும் Neilson Park இல் நடை பெற இருக்கும் இந்த நிகழ்வுக்கு கனடா வாழ் மற்றும் அமெரிக்கா வாழ் உசனையும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களையும் மற்றும் உசன் இராமநாதன் மகா வித்தியாலய ஆசிரியர்கள், பழைய மாணவர்களையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கின்றது.
உங்களின் உறவுகளோடும், நட்புகளோடும் மகிழ்ந்திருக்க இந்த நாளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும். அத்தோடு பல் சுவை உணவு வகைகளும் பரிமாறப்படும்.
கனடாவுக்கு பயணம் செய்யவிருக்கும் உசன் உறவுகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கூடிய வகையில் வருகை தருவதை வரவேற்கிறோம் .
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்