அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, August 18, 2014

இறைபதம் எய்திய தகவல்

உசன் கந்தசுவாமி கோவில் பம்பரைக் குருக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஐயாத்துரைக் குருக்கள் சந்திரி அம்மாவின் மகனும், ஹரி குருக்களின் சகோதரரும், உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு கேதீஸ்வரக் குருக்களின் மருமகனுமாகிய அசோக் குருக்கள் இந்தியாவில் இறைபதம் எய்திவிட்டார். மேலதிக தகவல் பின்னர் அறியத் தரப்படும்.

தகவல்:
சந்திரி அம்மா - 905-458-9990
ஹரி குருக்கள் - 416-989-9797


Sunday, August 3, 2014

கனடா/அமெரிக்கா வாழ் உசன் மக்களின் வருடாந்த ஒன்றுகூடல்



உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தக் கோடை கால ஒன்றுகூடல் எதிர்வரும் August 31, 2014 அன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது. வழமைபோல Neilson and finch ,Scarborough, Canada வில் அமைந்திருக்கும் Neilson Park இல் நடை பெற இருக்கும் இந்த நிகழ்வுக்கு கனடா வாழ் மற்றும் அமெரிக்கா வாழ்  உசனையும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களையும் மற்றும் உசன் இராமநாதன் மகா வித்தியாலய ஆசிரியர்கள், பழைய மாணவர்களையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கின்றது.
உங்களின் உறவுகளோடும், நட்புகளோடும் மகிழ்ந்திருக்க இந்த நாளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும். அத்தோடு பல் சுவை உணவு வகைகளும் பரிமாறப்படும்.
கனடாவுக்கு பயணம் செய்யவிருக்கும் உசன் உறவுகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கூடிய வகையில் வருகை தருவதை வரவேற்கிறோம் .


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்