அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, July 29, 2014

Dr.வே.பரமநாதன் அவர்களுக்கு கனடாவில் மதிப்பளிப்பு

உசனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள்டொரோண்டோ நகருக்கு வருகை தந்த வேளை அவருக்கு , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக நன்றி கூறியும் வாழ்த்துக்கள்  கூறியும் வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்களை கெளரவித்திருந்தது ,
எமது பாடசாலையான உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தின் ,சிறுவர் பாடசாலைகட்டிடம்,600,000.00)RS(ஏறத்தாள)பாடசாலைநூலகம்,11,00,000.00)rs(ஏறத்தாள) மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி(நடை பெற்று கொண்டிருகிறது)மட்டுமன்றி கிராமத்தின் பல அபிவிருத்தி திட்டங்களை எமது கிராமத்துக்கு வழங்கிய சமூக சேவையாளன் ,
திரு பரமநாதன் அவர்கள் கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக இவரின் எமது கிராமத்தின் அபிவிருத்தி சேவையை பாராட்டியும் இங்கிலாந்தின் Hillingdon பிரதேசத்தின் ”GP of the Year 2010” என்னும் விருதைப் பெற்றதை கௌரவிக்கும் முகமாகவும் , இந்த நிகழ்வு நடைபெற்றது ,
வைத்திய கலாநிதி இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் மங்களவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் ,
இன் நிகழ்வில் பலரின் கருத்துரைகளும் உசன் வரலாறு மற்றும் அபிவிருத்தியில் ஏற்பட்ட அனுபவங்களையும் பலரும் பரிமாறிக்கொண்டனர் 
அதை விட உசன் பாடசாலை மற்றும் நூலக கட்டிடபணிகளை செய்த கட்டிட ஒப்பந்த நிறுவன அதிபரும் தாயகத்தில் இருந்து வந்து  கலந்திருந்தார் ,
அவருக்கும் கெளரவம் வழங்கப்பட்டது ,