உசனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள்டொரோண்டோ நகருக்கு வருகை தந்துள்ளார் ,
எமது பாடசாலையான உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தின் ,சிறுவர் பாடசாலைகட்டிடம்,பாடசாலை நூலகம் ,மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி மட்டுமன்றி கிராமத்தின் பல அபிவிருத்தி திட்டங்களை எமது கிராமத்துக்கு வழங்கிய சமூக சேவையாளன் ,
திரு பரமநாதன் அவர்கள் தனது உசன் கிராமத்து மக்களை சந்தித்து மகிழ விரும்புவதுடன் ,கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக இவரின் எமது கிராமத்தின் அபிவிருத்தி சேவையை பாராட்டியும்
இங்கிலாந்தின் Hillingdon பிரதேசத்தின் ”GP of the Year 2010” என்னும் விருதைப் பெற்றதை கௌரவிக்கும் முகமாகவும் ,
உசன் மக்களுடனான சிறப்பு சந்திப்பு ஒன்று ஒழுங்கு செயப்பட்டுள்ளது ,
இடம்: 80 Altontower Cir , Party hall (Mccowan and Steels)
காலம் :எதிர்வரும் 13 ம் திகதி Sunday
நேரம் காலை : 11 மணி
உசன் மக்களுடன் இணைந்து கலந்துரையாடி மதிய உணவு விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் .
உங்கள் வரவுகளை உருதிபடுத்துமாறு வேண்டுகிறோம் ,
தொடர்புகளுக்கு :
திரு.இராமநாதர் -416-670-4031 or 416-299-6763
திரு .கிருஷ்ணபிள்ளை - 416-562-6244
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா