அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, July 11, 2014

ஒன்டாரியோ அரச சேவை விருது பெற்றார் உசன் பிரதிஷ்னி

 உசனைசேர்ந்த திரு, திருமதி நவரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும்
திரு திருமதி மதீஸ்வரன் ரஜனி அவர்களின் மகளும்மாகிய  செல்வி பிரதிஷ்னி மதீஷ்வரன் அவர்கள் கனடா ஒன்டாரியோ மாகாண அரசின் வருடாந்த தொண்டர் சேவை விருதினை பெற்றுக்கொண்டார் . 50 க்கு அதிகமான அமைப்புக்களின் 230 தன்னார்வ தொண்டர்களுக்கு இவ் விருது வழங்கப்பட்டது , இதில் எமது உசன் கிராமத்தை சேர்ந்த இளம் தலை முறை 
"பல்துறை வித்தகி" செல்வி . பிரதிஷ்னி மதீஷ்வரன் அவர்களும் இந்த விருதை பெற்றுக்கொண்டது .அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விடையமாகும் ,
இவரின் திறமைக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் "பல்துறை வித்தகி" எனும் 
கெளரவம் வழங்குவதில் மகிழ்வு கொள்கிறது .

தமிழர் தகவல் சஞ்சிகை சார்பில் தெரிவு செய்யப்பட்ட செல்வி .பிரதிஷ்ணி ஒன்டாரியோ அரசின் சின்னம் பொறித்த பதக்கமும், மாகாண முதல்வர் ,மற்றும் குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஆகியோரின் வாழ்த்துக்களையும் ,சான்றிதழையும் பெற்றுக்கொண்டார் 
செல்வி பிரதிஷ்னி உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் சகல நிகழ்வுகளிலும் தனது கலை பணியை திறம்பட செய்து எமக்கும் தொண்டாற்றிவருபவர் ,அதை விட கனடாவின் 
முக்கிய சேவை நிலையங்களிலும் தனது தன்னார்வ பணியை திறம்பட செய்துவருபவர் ,
தனது சங்கீத அரங்கேற்றத்தை அண்மையில் நிறைவு செய்து பல இசை ரசிகர்களின் பாரட்டையும் பெற்ற செல்வி ,பிரதிஷ்னி மதீஷ்வரன்  டொரோண்டோ நகரில் பல இசை வகுப்புகளை நடாத்தி வருகிறார் ,
இவரின் திறமைக்கு மாகாண அரசு வழங்கிய விருதுக்காய் , இவரின் திறமைக்கும் 
உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
இன்னும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ,

தகவல்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா