உசனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள்டொரோண்டோ நகருக்கு வருகை தந்த வேளை அவருக்கு , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக நன்றி கூறியும் வாழ்த்துக்கள் கூறியும் வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்களை கெளரவித்திருந்தது ,
எமது பாடசாலையான உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தின் ,சிறுவர் பாடசாலைகட்டிடம்,600,000.00)RS(ஏறத்தாள)பாடசாலைநூலகம்,11,00,000.00)rs(ஏறத்தாள) மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி(நடை பெற்று கொண்டிருகிறது)மட்டுமன்றி கிராமத்தின் பல அபிவிருத்தி திட்டங்களை எமது கிராமத்துக்கு வழங்கிய சமூக சேவையாளன் ,
திரு பரமநாதன் அவர்கள் கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக இவரின் எமது கிராமத்தின் அபிவிருத்தி சேவையை பாராட்டியும் இங்கிலாந்தின் Hillingdon பிரதேசத்தின் ”GP of the Year 2010” என்னும் விருதைப் பெற்றதை கௌரவிக்கும் முகமாகவும் , இந்த நிகழ்வு நடைபெற்றது ,
வைத்திய கலாநிதி இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் மங்களவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் ,