அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, June 2, 2014

மிருசுவில் பங்கின் வணக்க மாதா வழிபாடு


எமது அயல் சகோதர ஊரான மிருசுவில் பங்கில் வணக்க மாதா வழிபாடும் பழையவாய்க்கால் வேளாங்கன்னி சிற்றாலய வெள்ளிவிழாவும்.May 2014.

மிருசுவில் பங்கில் வணக்க (மே) மாத – மரியன்னை இல்ல தரிசிப்பு – வழிபாடுகள் இம்முறை சிறப்பான முறையில் நடைபெற்றன. 

பங்குத்தந்தை அருட்பணி அ.ஜெ.அ.ஜெயறஞ்சன் அவர்களின் வழிநடத்தலில் ஆலய, வலய ரீதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு இல்லங்களுக்கும் மரியன்னை திருச்சொருபம் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதி நாள் விழாவாகவும் புனித கன்னி மரியாள் எலிசபெத்தம்மாவை சந்தித்த திருநாளை முன்னிட்டும் 31-மே-2014 சனி மாலை 4:15 மணிக்கு புனித நீக்கொலார் ஆலய முன்றலில் இருந்து மிருசுவில்-பழையவாய்க்கால் வேளாங்கன்னி மரியன்னை சிற்றாலயத்திற்கு கச்சாய், அல்லாரை, கிளாலி, தவசிகுளம் மற்றும் மிருசுவில் பங்குமக்களினால் பவனியாக மரியன்னையின் கொடிகளுடனும் தங்கள் பங்குகளின் புனிதரின் கொடிகளுடனும் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு பழையவாய்க்கால் வேளாங்கன்னி மரியன்னை சிற்றாலயத்தின் 25வது வெள்ளிவிழா - திருவிழா திருப்பலியில் இணைந்து மரியன்னைக்கு விழா எடுக்கப்பட்டது. திருநாள் திருப்பலி அருட்பணி மைக்கல் சௌந்தரநாயகம் அடிகளார் தலைமையில். அருட்பணி றவிறாஜ், அருட்பணி ஜஸ்ரின், அருட்பணி பாலேந்திரன் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி ஜெயறஞ்சன் அவர்களுடன் நடைபெற்றது திருப்பலியை தொடர்ந்து ஆலயத்தை சுற்றி தேவ அன்னை பவனி, முடிவில் மரியன்னை ஆசீர் வழங்கப்பட்டது.