எமது அயல் கிராமமான விடத்தற்பளைமக்களின் கனடா வாழ் உறவுகள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் போன்று முதன் முதலாக கனடாவில் டொரோண்டோ நகரில்
எதிர்வரும் ஆடி மாதம் முதலாம் திகதி, செவ்வாய்கிழமை, காலை 10.30 மணியில் இருந்து மாலை 7 மணிவரை, 3159 birchmount Rd, Scarborough என்ற முகவரியில் இருக்கும் kids town water park என்ற பூங்காவில் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அதற்கு விடத்தற்பளை மக்கள், விடத்தற்பளைக் கமலாசனி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், மற்றும் விடத்தற்பளையின் அயல் கிராம நண்பர்கள் உறவினர்கள், மற்றும் விடத்தற்பளை நலன் விரும்பிகள் அனைவரையும் வருகை தந்து நிகழ்வினைச்சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்!!!
இந்த நிகழ்வுக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் அனைத்து உதவிகளையும்
ஆதரவையும் ஆதரவையும் வழங்குவதுடன் இன் நிகழ்வு சிறப்புடன் நடைபெற கனடா வாழ் உசன் மக்கள சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .