அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, May 31, 2014

கனடா ஒன்றியத்தின் நிர்வாகசபை கூட்டம்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகசபை கூட்டம் மே மதம்
30 ம் திகதி  டொராண்டோவில் நடைபெற்றது .
சங்கத்தின் தலைவர் கனகசபை நகுலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 2014 ம் ஆண்டுக்கான கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால
ஒன்றுகூடல் தொடர்பான விடையங்களும் ,அதற்கான ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது .
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ம் திகதி டொரோண்டோ வில் உள்ள நீல்சன் பூங்காவில் இன் நிகழ்வு நடைபெறவுள்ளது ,
வழமை போன்று சிறுவர் ,பெரியோருக்கான பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகள் , மதிய ,மாலைநேர உணவுகள் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளது .
அதை விட  கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் உசனில் இயங்கிவரும் பொது நூலகத்தின் எதிர்கால திட்டமிடல்கள் , ஆங்கில ,கணணி ,அறிவியல் வகுப்புகளை ஆரம்பித்தல் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது .
இது தொடர்பாக நிர்வாகசபை உறுப்பினர் நேரடியாக சென்று இந்த திட்டங்களை பரிசீலிப்பதாக முடிவெடுக்கப்பட்டது .