அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, March 22, 2014

"விவாஹா சுபமுகூர்த்த அழைப்பு "


உசன் கந்தசுவாமி கோவில் பரம்பரை பூசகர்களாக வாழ்ந்துவரும்
பிரம்ம ஸ்ரீ இரத்தினசபாபதி ஐயர் அவர்களின் பேத்தியும்
உசன் கந்தசுவாமி கோவில் பிரதமகுருவுமாக விளங்கிவரும்
 குகஸ்ரீ கேதீஸ்வரகுருக்கள் கனகாம்பிகை தம்பதிகளின் புதல்வியுமான சௌபாக்கியவதி ஹம்சினி அவர்களுக்கும் ,
உசன் பிரம்ம ஸ்ரீ இரத்தினசபாபதி ஐயர் அவர்களின் பேரனும் கைதடி பிரம்ம ஸ்ரீ 
ஸ்ரீ கணேஷகுருக்கள் சுசீலாதேவி தம்பதிகளின் புதல்வனுமான 
சிரஞ்சீவி ராஜாராம் அவர்களுக்கும் .
திருமங்கல்ய வைபவம் நடைபெறவுள்ளது .
எதிர்வரும் 31.03.2014 அன்று உசனில் உள்ள மணமகள் வீட்டில் திருமாங்கல்யம் நடைபெற உசன் முருகன் திருவருள் கூடியுள்ளது ,
இவ் விழாவில் அனைவரையும் கலந்து மணமக்களை ஆசிர்வதிக்குமாறு
அன்புடன் அழைக்கிறோம் .
அத்துடன் புலம் தேசத்து உசன் உறவுகள் இந்த அழைப்பை எனது குடும்பத்தின் அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறும் , உங்கள் அன்பு ஆசிர்வாதங்களை மணமக்களுக்கு வழங்குமாறு வேண்டுகிறேன் .

அழைப்பு :

குகஸ்ரீ கேதீஸ்வரகுருக்கள் கனகாம்பிகை தம்பதிகள்
உசன் மிருசுவில்
94777238561
94213214324


Monday, March 17, 2014

விவாகத் திருநாள் வாழ்த்துக்கள்


உசன் "பண்டிதர் "திரு திருமதி சரவணமுத்து சின்னத்தங்கம் அவர்களின் பேரனும் திரு திருமதி. இராமநாதர் சரோஜினி அவர்களின் புதல்வனுமான செல்வன் ராஜீவ் அவர்களுக்கும், செல்வி அனுப்பிரியா அவர்களுக்கும் 16-03-2014 அன்று Toronto நகரிலே திருமண விழா சிறப்பாக நடைபெற்றது. திருமண வாழ்வியலில் இணைந்து கொண்ட திரு திருமதி ராஜீவ் அனுப்பிரியா தம்பதியினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாக இனிய திருமண வாழ்த்துக்கள்.

திருமண நிகழ்வின் காணொளி பதிவு ......

http://new.livestream.com/accounts/1729214/events/2837502





Saturday, March 8, 2014

திருமதி புனிதவதி பொன்னம்பலம் அவர்களின் இறுதிக் கிரியைகள்

காலஞ்சென்ற திருமதி புனிதவதி பொன்னம்பலம் அவர்களின் இறுதிக் கிரியைகளை இணையத்தள வாயிலாக நேரடி ஒளிபரப்புச் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 03/09/2014 ஞாயிற்றுக் கிழமை Toronto நேரம் காலை 11 மணிமுதல் இந்த ஒளிபரப்பை https://m.ustream.tv/channel/chapel-ridge-funeral-home என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம் என்பதைக் குடும்பத்தினர் அறியத் தருகின்றனர்.


Thursday, March 6, 2014

திருமதி புனிதவதி பொன்னம்பலம்

யாழ். விசுவர் வளவு சரசாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வதிவிடமாகவும், தற்போது ரொரன்ரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புனிதவதி பொன்னம்பலம் அவர்கள் 06-03-2014 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற பெரியதம்பி, கற்பகம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தயா, நந்தா, செந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாலகுமாரன், சுப்பிரமணியம், சனார்த்தனா, மகேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, நாகமுத்து சிவப்பிரகாசம், செல்லத்துரை, ஐயாத்துரை, மகேஸ்வரி கனகசபை, மற்றும் இராஜரட்ணம், பாலசிங்கம், சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr.பாலினி பொன்கோவன், தயன், தமிழினி, தக்‌ஷாயினி ஜெகன், தக்‌ஷானந், சுபானந், சுபாஷினி (Dr.)நிர்மலன், கஜானந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

திவ்வியா, தீபா, தீபிகன், காருண்ணியன், அக்சியா, அம்ரிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை, 08/03/2014 மாலை 5 மணி முதல் மாலை 9 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறு நாள் ஞாயிற்றுக்கிழமை, 09/03/2014 காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அதே முகவரியில் இறுதிக் கிரியைகள் நிகழ்த்தப்பட்டு, பின்னர் 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7 என்ற முகவரியில் அமைந்திருக்கும் St. John's Norway Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
செந்தா — கனடா+14164213326
நந்தா — கனடா+19052393441
பாலினி — இலங்கை+94773821563
தக்‌ஷா — கனடா+16478323481
தயன் — பிரித்தானியா+442086900872