உசனில் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் உசன் மக்களும் மற்றும் அனைத்துலக உசன் மக்களும் இணைந்து உருவாக்கி வந்த
"பண்டிதர்" சரவணமுத்து பொது நூலகம் கடந்த ஜனவரி மாதம் 3 ம் திகதி
முறைப்படி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது .
உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களும் ,மிருசுவில் கத்தோலிக்க மத குருவும் இணைந்து உசன் மக்கள் முன்னிலையில் ஆரம்பித்து வைத்தனர் ,
நூலக நிர்வாகசபை தலைவர் திருமதி.மீரா தேவரஞ்சன் தலைமையில் நடந்த விழாவினை ஆலோசகர் திரு .மு.க.சிவானந்தம் அவர்கள் தொகுத்து வழங்கினார் . அதை தொடர்ந்து வரவேற்பு உரையினை வைத்தியர் .திரு .ஐ.ஜெபனாமகநேஷன் அவர்களும் அதனை தொடர்ந்து கருத்துரைகளும் நடைபெற்றன .இன் நிகழ்வில் உசன் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் நினைவு பேருரையை பண்டிதர் திரு சிவபிரகாசம் அவர்கள் வழங்கியிருந்தார் .
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பான பல்கலைகழக பிரதம நூலகர் திருமதி .ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கியிருந்தார் . நிகழ்வில் கலந்து கொண்ட மக்களின் பார்வைக்கு நூலக புத்தகங்கள் காட்சிபடுத்தபட்டன .
இந்த நூலகம் அமைக்க ஆணிவேராக இருந்து செயல்பட்ட அமேரிக்கா வாழ் திருமதி ,சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா ) அவர்களுக்கு அனைவரின் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது .
நூலக அமைப்பின் செயலாளர் திரு.ச .ஜதிகேசனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்று , நூலக செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது .