கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படும் வருடாந்த உசன் மக்களின் குளிர்கால ஒன்று கூடல் , டொரோண்டோ வில் உள்ள
Baba Banquet Hall மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது .
சங்கத்தின் தலைவர் .திரு .கனகசபை நகுலன் தலைமையில் நிகழ்வு தொடங்கியது , நிகழ்வை செயலாளர் திரு .சுப்ரமணியம் பாஸ்கரன் தொகுத்து வழங்கினார் .
வழமை போன்று கனடா வாழ்உசன் இளம் சமுதாயத்தின் கலை நிகழ்ச்சிகளும் , உசனில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொது நூலக திறப்புவிழா வீடியோ காட்சிகளும் , வெண் திரையில் காண்பிக்கப்பட்டது ,
இன் நிகழ்வில் பொது நூலகத்தின் நடவடிக்கை வெற்றி பெற்ற விடயம் குறித்து மக்களுக்கு தெளிவாக கூறப்பட்டது , உசனில் நடைபெற்ற நூலக திறப்பு விழாவில் , நடாத்தப்பட்ட உரை அனைத்து கனடா வாழ் மக்கள் மத்தியிலும் நம்பிக்கை ஊட்டியது .
அத்துடன் ஒத்துளைப்பு வழங்கிய அனைத்து உசன் உணர்வாளர்களுக்கும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது .
இயந்திர வாழ்க்கையில் நாளந்த பொழுதை கழித்து வரும் மக்களுக்கு இவ்வாறான நிகழ்வு அவர்களை மீண்டு உசன் மண்ணின் நினைவுகளை மீட்ட உதவியததாக பலராலும் கூறப்பட்டது .
ருசியான இராப்போசன விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது .
மேலதிக படங்கள் எமது Facebook தளத்தில்