அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, December 21, 2013

உசன் உறவுகள் 2013

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடலான "உசன் உறவுகள் 2013" நிகழ்வு January 18, 2014 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. Scarborough, கனடாவில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்த நிகழ்வு இடம்பெறும். பல கலை நிகழ்ச்சிகளோடு, இரவு விருந்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.

இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சி வழங்க விரும்புபவர்கள் மற்றும் இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்பும் நிறுவனங்களும், தனி நபர்களும் ஒன்றியத்தின் செயலாளரோடு secretary@usan.ca என்ற மினஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உங்களின் ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி.

செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா