அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, November 28, 2013

அன்பான உசன் மக்களுக்கு........

www.usan.ca என்ற இணையத் தளத்தை இயக்குபவர்கள் என்ற வகையில் அது குறித்து தவறாகக் கதைக்கப்படுகிறது என்று எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

1. எமது இணையத்தளத்தில் எல்லா மரண அறிவித்தல்களும் பிரசுரிக்கப்படுவதில்லை.
2. இதை இயக்குபவர்கள் தமது உறவினர்களின் அறிவித்தலை மட்டுமே பிரசுரிப்பார்கள்.
3. இதில் கனடா வாழ் உசன் மக்களின் செய்திகளையே பிரசுரிப்பார்கள்.
4. உசன் மக்களுக்கு எதுக்கு இணையதளம், FaceBook, Youtube?

இது போன்ற பல உண்மையற்ற விடையங்களைச் சிலர் பேசியது எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. எமது ஒன்றியத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களால் இது எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதால் இதைப் பிரசுரிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

அனைத்துலகிலும் வாழும் உசன் மக்களுக்கு இடையில் ஒரு உறவுப்பாலமாய் அமைந்து, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உருவாக்கிய இணையதளம் www.usan.ca. இந்தத் தளத்தின் பரமரிப்புக்கள், செலவுகள் யாவும் சங்கத்தினால் மட்டுமே கவனிக்கப்படுகிறன.

இந்தத் தளத்தில் ஒரு மரண அறிவித்தலைப் பிரசுரிப்பதாக இருந்தால், கனேடிய ஊடக சட்டவிதிகளுக்கு அமைவாகக் குறித்த அறிவித்தல் தொடர்பான குடும்ப அங்கத்தவர்களின் அனுமதியும், உறுதிபடுதலும் இன்றி நாம் அதைப் பிரசுரிக்க முடியாது. உரியவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தெரிவித்தால் நாம் நிச்சயம் பிரசுரிப்போம், பிரசுரித்துமிருக்கிறோம்.

மரண அறிவித்தல் மட்டுமன்றி ஏனைய செய்திகளையும் எங்களுக்கு அனுப்பி வைத்தால் செய்திகளை உறுதி செய்துகொண்டு அவற்றையும் பிரசுரிக்க நாம் தயாராகவே உள்ளோம்.

இதுவரை பிரசுரிக்கப்பட்ட எந்த அறிவித்தல்களுக்கும் எவரிடம் இருந்தும் எந்த வித கட்டணமும் அறவிடவில்லை. பணம் செலவழித்து வேறு தளங்களில் பிரசுரிக்கும் போதும், இதை நாம் ஒரு இலவச சேவையாகவே உசன் மக்களுக்குச் செய்துவருகிறோம்.

எமது தளத்தை அனைத்துலக உசன் மக்களும் பயன்படுத்தமுடியும். இதைவிட எம்மால் இயக்கப்படும் பொது ஊடகங்களான Usanpeople என்ற FaceBook தளம் மற்றும் Youtube தளம் அனைத்தும் உசன் மக்களுக்காகவே பயன்படுத்தபடுகின்றன. எமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் செய்திகளும், அறிவித்தல்களும் உலகில் பரந்து வாழும் உசன் மக்கள் பலரின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளையும் சென்றடைகின்றன.

எனவே உங்கள் செய்திகள், நிகழ்வுகள், அறிவித்தல்களை secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எம்முடனும், அனைத்துலக உசன் மக்களுடனும் பகிந்து கொள்ள முவாருங்கள். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா குறித்துத் தவறாகப் பேசுபவர்களுக்கு இதைத் தெரிவியுங்கள்.

நன்றி.

செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா