உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகத்தின் 53 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி 16-11-2013 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை மற்றும் இரவு போட்டிகளாக உசன் கந்தசாமி கோவிலுக்கு மேற்கு பக்கமாக அமைந்திருக்கும் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது .
நேற்று நடைபெற்ற போட்டியில் விறுவிறுப்பான கடுமையான பலப்பரீட்சையின் பின்னர் வரணி இளைஞர் அணியினர் வெற்றி கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.