அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, November 2, 2013

உசன் மண்ணில் மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் 53 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி ஒன்றை உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 53 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் பல சேவைகளை உசன் மண்ணில் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வகையிலே அண்மையில் உயிர் காப்புச் சேவையான இரத்த தான நிகழ்வொன்றை நடாத்தி சாதனை செய்துள்ளதைப் பத்திரிகைகள் உட்படப் பலரும் பாராட்டியுள்ளனர்.

நடைபெற இருக்கும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கான விண்ணப்பங்களை உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் கோரியுள்ளது. ஆர்வமுள்ள அணிகள் தங்களது விண்ணப்பங்களை 06-11-2013 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 0774129348 அல்லது 0776534278 என்ற தொலை பேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளாலாம்.

இந்தக் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.