அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, November 28, 2013

அன்பான உசன் மக்களுக்கு........

www.usan.ca என்ற இணையத் தளத்தை இயக்குபவர்கள் என்ற வகையில் அது குறித்து தவறாகக் கதைக்கப்படுகிறது என்று எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

1. எமது இணையத்தளத்தில் எல்லா மரண அறிவித்தல்களும் பிரசுரிக்கப்படுவதில்லை.
2. இதை இயக்குபவர்கள் தமது உறவினர்களின் அறிவித்தலை மட்டுமே பிரசுரிப்பார்கள்.
3. இதில் கனடா வாழ் உசன் மக்களின் செய்திகளையே பிரசுரிப்பார்கள்.
4. உசன் மக்களுக்கு எதுக்கு இணையதளம், FaceBook, Youtube?

இது போன்ற பல உண்மையற்ற விடையங்களைச் சிலர் பேசியது எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. எமது ஒன்றியத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களால் இது எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதால் இதைப் பிரசுரிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

அனைத்துலகிலும் வாழும் உசன் மக்களுக்கு இடையில் ஒரு உறவுப்பாலமாய் அமைந்து, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உருவாக்கிய இணையதளம் www.usan.ca. இந்தத் தளத்தின் பரமரிப்புக்கள், செலவுகள் யாவும் சங்கத்தினால் மட்டுமே கவனிக்கப்படுகிறன.

இந்தத் தளத்தில் ஒரு மரண அறிவித்தலைப் பிரசுரிப்பதாக இருந்தால், கனேடிய ஊடக சட்டவிதிகளுக்கு அமைவாகக் குறித்த அறிவித்தல் தொடர்பான குடும்ப அங்கத்தவர்களின் அனுமதியும், உறுதிபடுதலும் இன்றி நாம் அதைப் பிரசுரிக்க முடியாது. உரியவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தெரிவித்தால் நாம் நிச்சயம் பிரசுரிப்போம், பிரசுரித்துமிருக்கிறோம்.

மரண அறிவித்தல் மட்டுமன்றி ஏனைய செய்திகளையும் எங்களுக்கு அனுப்பி வைத்தால் செய்திகளை உறுதி செய்துகொண்டு அவற்றையும் பிரசுரிக்க நாம் தயாராகவே உள்ளோம்.

இதுவரை பிரசுரிக்கப்பட்ட எந்த அறிவித்தல்களுக்கும் எவரிடம் இருந்தும் எந்த வித கட்டணமும் அறவிடவில்லை. பணம் செலவழித்து வேறு தளங்களில் பிரசுரிக்கும் போதும், இதை நாம் ஒரு இலவச சேவையாகவே உசன் மக்களுக்குச் செய்துவருகிறோம்.

எமது தளத்தை அனைத்துலக உசன் மக்களும் பயன்படுத்தமுடியும். இதைவிட எம்மால் இயக்கப்படும் பொது ஊடகங்களான Usanpeople என்ற FaceBook தளம் மற்றும் Youtube தளம் அனைத்தும் உசன் மக்களுக்காகவே பயன்படுத்தபடுகின்றன. எமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் செய்திகளும், அறிவித்தல்களும் உலகில் பரந்து வாழும் உசன் மக்கள் பலரின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளையும் சென்றடைகின்றன.

எனவே உங்கள் செய்திகள், நிகழ்வுகள், அறிவித்தல்களை secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எம்முடனும், அனைத்துலக உசன் மக்களுடனும் பகிந்து கொள்ள முவாருங்கள். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா குறித்துத் தவறாகப் பேசுபவர்களுக்கு இதைத் தெரிவியுங்கள்.

நன்றி.

செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, November 24, 2013

திருமதி. கந்திப்பிள்ளை கதிரவேலு

உசனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்திப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 24-11-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

கதிர்காமநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிஸ்கந்தராசா, சாந்தநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணைமலர், கனகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மோகனஸ்ரீ பிரியா, கைலாஸ், யாழினி, பகீரதி மகிந்தன், சதீஸ்குமார் கமலினி, கஸ்தூரி கபிலன், கன்னிகா காஞ்ஜீவன், கெளசிகன் மாதுரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹபிஷன், சங்கீர்த்தனன், லக்‌ஷிகன், அஸ்மிகா, பவிஷன், அனுஸ்கா, கதுரிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈச்சங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கைலாஷ் (பேரன்)
காஞ்சீவன்

தொடர்புகளுக்கு:
சிறிஸ்கந்தராசா (மகன்) — இலங்கைசெல்லிடப்பேசி: +94773694246
சாந்தநாயகி (மகள்) — இலங்கைசெல்லிடப்பேசி: +94774249242
மோகனஸ்ரீ (பேரன்) — பிரித்தானியாசெல்லிடப்பேசி: +447581266180
பகிரதி (பேத்தி) — பிரித்தானியாசெல்லிடப்பேசி: +447448856215
கனகரத்தினம் (மருமகன் - இலங்கைசெல்லிடப்பேசி: ++94774249242
கைலாஷ் (பேரன்) - New Yorkசெல்லிடப்பேசி: +13475006661
காஞ்சீவன் - இலங்கைசெல்லிடப்பேசி: +94777726516


Sunday, November 17, 2013

உசனில் சிறப்பாக நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகத்தின் 53 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி 16-11-2013 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை மற்றும் இரவு போட்டிகளாக உசன் கந்தசாமி கோவிலுக்கு மேற்கு பக்கமாக அமைந்திருக்கும்  மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது .
இந்தநிகழ்வுக்கு பெருமளவான வீரர்கள் ஆதரவளர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இதை ஒழுங்கு செய்த ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கோடானகோடி நன்றிகளை தெரிவித்துகொள்கின்றனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் விறுவிறுப்பான கடுமையான பலப்பரீட்சையின் பின்னர் வரணி இளைஞர் அணியினர் வெற்றி கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.
வெற்றிபெற்ற அணியினருக்கு உசன் கழக நிர்வாகிகள் வெற்றிகின்னத்தை வழங்கினர் .




Wednesday, November 13, 2013

நூலக உத்தியோகத்தர்கள் தெரிவாகினர் ....

உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்துக்கான வேலைவாய்ப்புக்கு
கிடைத்த விண்ணப்பங்களில் ,தெரிவுசெய்யப்பட சில விண்ணப்பதாரர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்வு நிலை உறுப்பினர்கள் முன்னிலையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது ,
அதில் கல்வித்தகமை,திறமை ஆகியவற்றுடன் ,
குடும்பபொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ,அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் முகமாக ,
உசனைசேர்ந்த செல்வி .முருகேசம்பிள்ளை கௌரி அவர்கள் ,நூலக உத்தியோகத்தராகவும் ,திரு.சிவலிங்கம் அவர்கள் நிலைய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும்  நிர்வாகசபையால் ,ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர் ,


Tuesday, November 12, 2013

உசன் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுபோட்டி ....

உசனில் இயங்கிவரும் முன்பள்ளி மாணவர்களின் உடல் ,உள விருத்திக்காய் 
வருடாந்தம் நடாத்தப்படும் , முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுபோட்டியை ,இந்த வருடமும் நடாத்தும் முகமாக , இன்றைய தினம் உசனில் உள்ள முன்பள்ளி கட்டிடத்தில் , பெற்றோருக்கான  கூட்டம் 
நடைபெறவுள்ளது , கல்விநிலைய நிர்வாக இயக்குனர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் , விளையாட்டுப்போட்டி தொடர்பாகவும் ,மாணவர்களின் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் , ஆராயப்படவுள்ளதால் ,
பெற்றோர் ,ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் , விளையாட்டுபோட்டியை திறம்பட நடாத்த பங்களிப்பு வழங்குமாறும் வேண்டுகிறோம் .


Sunday, November 10, 2013

வருடாந்த பரிசளிப்பு விழா

உசன் இராமநாதன் மஹா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு  விழா
உசன் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது ,
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்
கடந்த வருடங்களில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி
ஊக்கம் வழங்கப்பட்டது , இந்த விழாவில் பாடாசாலை மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன , பெற்றோர் ,பழைய,மாணவர்கள் ,நலன்விரும்பிகள் என பலதரப்பட்ட மக்களும் இந்த பரிசளிப்பு விழாவில்  கலந்து சிறப்பித்திருந்தனர் ,உசன் பாடசாலை பழையமாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள்  இந்த நிகழ்வுக்கு அதிக ஊக்கம் வழங்கியிருந்தனர் .
                                    













Saturday, November 2, 2013

உசன் மண்ணில் மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் 53 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி ஒன்றை உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 53 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் பல சேவைகளை உசன் மண்ணில் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வகையிலே அண்மையில் உயிர் காப்புச் சேவையான இரத்த தான நிகழ்வொன்றை நடாத்தி சாதனை செய்துள்ளதைப் பத்திரிகைகள் உட்படப் பலரும் பாராட்டியுள்ளனர்.

நடைபெற இருக்கும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கான விண்ணப்பங்களை உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் கோரியுள்ளது. ஆர்வமுள்ள அணிகள் தங்களது விண்ணப்பங்களை 06-11-2013 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 0774129348 அல்லது 0776534278 என்ற தொலை பேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளாலாம்.

இந்தக் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.