உசனைச்சேர்ந்த திரு திருமதி அருட்பிரகாசம் பூவதி தம்பதிகளின் புதல்வி செல்வி கஜானி அவர்களுக்கும் ,செல்வன் யசோதன் அவர்களுக்கும்
உசன் முருகன் அருளால் ,உசனில் திருமணம் இனிதே நடைபெற்றது ,
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு உசனில் நடைபெற்ற மிகப்பெரும் திருமண விழாவாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ,இலங்கையில் பல பகுதிகளிலும் வாழும் உசன் மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் , இதனால் மீண்டும் உசன் மக்கள் ஒன்றுகூடிய சிறப்பு நாளாக இது பதிவாகியிருந்தது .
திருமண பந்தத்தில் இணைத்து கொண்ட திரு திருமதி யசோதன் கஜானி தம்பதியினருக்கு ,கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு. புதிதாய் எமது உசனுக்குள் புகுந்த மருமகனை அன்போடு வரவேற்கிறோம் . உங்கள் திறமைகளின் ஒரு பகுதியை எமது ஊரின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டுகிறோம் .
பல்லாண்டு வாழ்க
அனைத்துலக உசன் மக்கள்