அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, October 24, 2013

திருமண வாழ்த்துக்கள்


உசனைச்சேர்ந்த திரு திருமதி அருட்பிரகாசம்  பூவதி தம்பதிகளின் புதல்வி செல்வி கஜானி அவர்களுக்கும் ,செல்வன் யசோதன் அவர்களுக்கும்
உசன் முருகன் அருளால் ,உசனில் திருமணம் இனிதே நடைபெற்றது ,
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு உசனில் நடைபெற்ற மிகப்பெரும் திருமண விழாவாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ,இலங்கையில் பல பகுதிகளிலும் வாழும் உசன் மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் , இதனால் மீண்டும் உசன் மக்கள் ஒன்றுகூடிய சிறப்பு நாளாக இது பதிவாகியிருந்தது .
திருமண பந்தத்தில் இணைத்து கொண்ட திரு திருமதி யசோதன் கஜானி தம்பதியினருக்கு ,கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு. புதிதாய் எமது உசனுக்குள் புகுந்த மருமகனை அன்போடு வரவேற்கிறோம் . உங்கள் திறமைகளின் ஒரு பகுதியை எமது ஊரின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த  வேண்டுகிறோம் .

பல்லாண்டு வாழ்க
அனைத்துலக உசன் மக்கள்   


Saturday, October 19, 2013

உசனில் உடனடி வேலைவாய்ப்பு .....விண்ணப்ப இறுதி திகதி Oct 27

உசனில் உருவாகிவரும் "பண்டிதர் சரவணமுத்து " பொது நூலகத்தின் வேலைகள் பூர்த்தியாகி வரும் நிலையில் . மிகவிரைவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்
பின்வரும்  பணிகளுக்கான . வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்  உள்ளது ,
எனவே தகுதியானவர்கள் உங்கள் சுய விபர கோவையுடன் உங்கள் விண்ணப்பத்தை , கீழ் வரும் உத்தியோகத்திரடம் சமர்ப்பிக்கலாம்
 
 தகுதியான அடிப்படை சம்பளம் மற்றும் இலங்கை நூலக கட்டுப்பட்டு சபையிடம் பயிட்சியும் வழங்கப்படும் 
பதவி நிலை 1.
                     நூலக அலுவலக நிர்வாக உத்தியோகத்தர்   (பெண் )

    பதவி நிலை 2.
                   நூலக அலுவலக நிர்வாக உதவி உத்தியோகத்தர்(பெண்/ஆண்  )
                        (தற்காலிகம் /பகுதிநேரம்)

    பதவி நிலை 3.
                      நூல்நிலைய பராமரிப்பாளர்/இரவு காவல்  (ஆண்)

தகுதி :   * க.போ,த  சா/தரம்  நிறைவு செய்திருக்க வேண்டும்
                * அடிப்படை ஆங்கில அறிவு
                * அடிப்படை கணனி  அறிவு
                * சேவை மனப்பான்மை/அர்ப்பணிப்பு உடன் பணிபுரியும் தன்மை
                * உசனில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
                * பயிற்சி நெறியை இலகுவாக கற்றுக்கொள்ளும் திறமை
                * நிலையத்தின் நிர்வாகத்தை முழுமையுடன் கவனிக்கும் திறமை
பதவிநிலை 3.
               * காணி கட்டிடத்தை பராமரித்த அனுபவம்
               * இரவு காவலுடன் நிலைய சுற்றாடல் துப்பரவு
               * இரவு/பகல்  முழுமையாக பாதுகாக்கும் பொறுப்பு
               * நிர்வாகசபைக்கு கட்டுப்பட்டு இயங்க கூடிய மனப்பாங்கு
               * சுயமாக அடிப்படை கட்டிட திருத்த வேலைகள் தெரிந்திருப்பது

உங்கள் விண்ணப்பங்களை அக்டோபர் 27 ம் திகதிக்கு முன்னர் கையளிக்கவும் மேலதிக விபரங்களும் தகவல்களும் உசன் நிவாகசபையிடம் பெற்றுக்கொள்ளமுடியும்.
உங்கள் விண்ணப்பங்களை .
தலைவர் :திருமதி மீரா தேவரஞ்சன்
                     திரு.ஜதிகேசன்
                    திரு.காஞ்சீபன்
                     திரு.சிவானந்தன்   ஆகியோரிடம் கையளிக்கலாம் .
**** திறமை ,அனுபவம் , மனப்பாங்கு நன்னடத்தை , ஆகியவற்றின் அடிப்படையில்  நேர்முகதேர்வு மூலமே  பணியாளர்கள் தெரிவுசெய்யப்படுவர் ******
    


Wednesday, October 16, 2013

உசன் இளையோரின் இரத்ததானம் ......

உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகத்தின் 53வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட மாபெரும் உயிர்காப்பு பணியான இரத்த தான முகாமில் பங்கு கொண்டு, "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்கத் தமது உதிரத்தை உவந்தளித்த உத்தமர்களுக்கு எமது கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் காலமாக உசனில் வாழும் இளையவர்கள் ஊருக்கும், நாட்டுக்கும் இவ்வாறு பணி செய்து வருவது யாவரும் அறிந்ததே. தொடர்ந்து வரும் சந்ததியினரும் அதைச் செய்து வருவது பாராட்டுக்குரியது. உங்கள் பணிக்கு உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் - கனடா தலை வணங்குகிறது. தொடரட்டும் உங்கள் பொதுப்பணி.

இதை முன்னின்று நடத்திய ஸ்ரீ முருகன் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு எமது நன்றிகள்.
முருகேசு முரளி 

சுப்ரமணியம் சுபேஷ்

செயலாளர் ; செல்லத்துரை ஜதிகேசன்

Add caption

பாலசிங்கம் காஞ்சீபன்

பகீரதன் 

ரூபன் 




Wednesday, October 9, 2013

உசன் "விஜய" சகோதர்கள் சாதனை

உசனில் பிறந்து, உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் படித்து, உசனில் பல மாணவர்களுக்குப் படிப்பித்த, இரு ஆசிரியர்கள் இலங்கையில் சிறந்த ஆசிரியருக்கான சிறப்பு அதிஉயர் விருதான "பிரதீபா பிரபா" விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
உசனில் "விஜய" குடும்பத்தைச் சேர்ந்த திரு. திருமதி ஒப்பிலாமணி அவர்களின் புதல்வர்களான திரு. ஒ.விஜயரத்தினம் மற்றும் திரு. ஒ.விஜயதாசன் ஆகியோர், யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் சிறந்த ஆசிரியர்களுக்கான இலங்கையில் அதி உயர் விருதான "பிரதீபா பிரபா" விருதினை 05/10/2013 அன்று பெற்றுக்கொண்டனர். "விஜய" சகோதரர்கள் ஒரே பாடசாலையில் ஒரே விருதைப் பெற்று சாதனை படைத்தனர். இவர்களின் திறமையால் இவர்களைப் பெற்று வளர்த்த கிராமமும், கல்வியூட்டிய உசன் பாடசாலையும் பெருமை கொள்கிறது.

இவர்களின் தந்தையார் திரு. ஒப்பிலாமணி அவர்கள் உசனில் பல மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பித்த ஆசிரியர் என்பதுடன் "விஜய" சகோதரர்கள் பலரும் ஆசிரிய பணியில் இருப்பது மட்டுமன்றி கடல் கடந்தும் இவர்களின் ஆசிரியப் பணியாக திருமதி. வியஜகுமாரி அவர்கள் கனடாவில் தமிழ் மொழிக்கல்வியை வளர்க்க கனேடிய பாடசாலை கட்டமைப்பில் தமிழ் ஆசிரியாராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களின் இளைய சகோதரன் வியஜரூபன் அவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிர்வாகசபை உறுப்பினராக இருந்து அதன் முயற்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமை சேர்த்த உசன் "விஜய" சகோதரர்களுக்கு அனைத்துலக வாழ் உசன் மக்கள் சார்பாகவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாகவும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் பணி உசன் கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். உங்கள் பணி தொடரவும், இன்னும் பல விருதுகள் பெற்று உசன் மண்ணுக்குப் பெருமை சேர்க்கவும் வாழ்த்துகிறோம்.


Thursday, October 3, 2013

உசனில் உருவாக்கி வரும் நூலகம் ......


அனைத்துலக உசன் மக்களையும் இணைத்து யாழ் மாவட்டத்தில் அனைத்து வளங்களும் உள்ள சிறந்த கிராமமாக உசனை மாற்றும் முயற்சியில் இறங்கிய கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் பிரதான பணியான நூலகம அமைக்கும் முயற்சியில் ,
கனடா ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினரும் ,உசன் நூலக ஒருங்கிணைப்பாளரும் ஆகிய திருமதி ,சி.சாந்தினி நவரத்தினம் அவர்கள் நேரடியாக உசனுக்கு சென்று , உசன் நிர்வாகசபை உறுப்பினர்களுடன்
மேலதிக நடவடிக்கை குறித்து கந்துரையாடி  நடவடிக்கைகளையும் நேரடியாக பார்வையிட்டு வந்துள்ளார் .

இராணுவ பாவனையிலிருந்த நூலகத்துக்குரிய வீட்டை உசன் நிர்வாக உறுப்பினர்கள் மீள் திருத்த வேலை செய்து வருகின்றனர் ,
நூலக கட்டிடத்தின் உள்ளக உள்ளக தோற்றமே இது .......