அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, September 16, 2013

கனடாவில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பு

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அனைத்துலக உசன் மக்களையும் அரவணைத்து உசனில் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளில் ஒன்றான உசனில் பொது நூலகம் அமைக்கும் பணியின் இறுதிக்கட்ட முடிவுகள் குறித்த கருத்துப் பரிமாறல் சந்திப்பு ஒன்று September மாதம் 15 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு அன்று கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் நடைபெற்றது.





இந்தச் சந்திப்பில் உசன் அபிவிருத்திக்கு முன்னின்று பங்களிப்பு வழங்கும் உசன் உறவுகள் கலந்திருந்தனர் . பண்டிதர் சரவணமுத்து நூலகத்திற்குத் தமது வீட்டை உவந்தளித்த திரு. திருமதி. சுகுணேஸ் சுசீலா தம்பதிகள் அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் முக்கியமான விடையங்களாக:
  • உசனில் உருவாக்கப்பட்ட அமைப்பைச் சட்டப்படி பதிவு செய்தல்
  • நீண்ட காலம் நூலகத்தை நிர்வகிக்கத் தேவையான நிதி விடயம்
  • உசன் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவைப் புகட்டக் கூடிய திட்டங்கள்
  • உசன் கிராமத்தின் பொது விடையங்கள்
போன்றவை தொடர்பான கருத்து பரிமாறல் இடம்பெற்றது.

பொது நூலகத்தை விரைவில் முழு நூலகமாக அமைக்கத் தமது முழுப் பங்களிப்பையும் திரு. திருமதி. சுகுணேஸ் சுசீலா அவர்கள் வழங்கியதுடன், அடிப்படைச் செலவுகளுக்காக $1000.00 (SL Rs.125000.00) நிதியுதவியையும் வழங்கியிருந்தனர்.

இந்த விசேட சந்திப்பில் எமது நிர்வாகசபை உறுப்பினர்களுடன் உசன் அபிவிருத்திக்கு எம்மோடு முன்னின்று உதவிகள் வழங்கிவரும் திரு. வெற்றிவேலு பிரபானந்தன், திரு. நல்லதம்பி கனகலிங்கம் (ராசா) ஆகியோருடன் பின்னர் Dr. இந்திரன் ஆசிர்வாதம் அவர்களும் இணைந்திருந்து பல ஆலோசனைகளையும் வழங்கினர்.

நூலகம் அமைக்கும் பணியின் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் மிக விரைவில் உசனில் பொது நூலகம் முழுமையாக அமையவுள்ளது. இதற்கு அனைத்துலக உசன் மக்களின் ஆதரவையும் வேண்டி நிக்கிறோம்.