திரு திருமதி மதீஸ்வரன் அவர்களின் மகளும், காலஞ்சென்ற திரு நவரத்தினம், திருமதி உமாமகேஸ்வரி நவரத்தினம் அவர்களின் பேத்தியுமாகிய செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் September மாதம் 21 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு, சனிக்கிழமை அன்று Toronto, கனடாவில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வு 50 Hallcrown Place, Toronto என்ற முகவரியில் அமைந்துள்ள Armenian Youth Centre கலையரங்கில் இடம்பெறும். மாலை 5:30 மணிக்கு இந்தச் சிறப்பு அரங்கேற்றம் இடம்பெற உள்ளது.
ஓம் ஸ்ரீ சக்ர கான சபா அதிபர், சங்கீத பூஷணம், ஸ்ரீமதி கமலாதேவி சண்முகலிங்கம் அவர்களிடம் பல வருடங்களாக முறையாக சங்கீதம் கற்று வருகின்றார் செல்வி பிரதிஷ்னி. சங்கீதம் கற்று வரும் காலங்களில் பல சிறப்பு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் நிகழ்த்தும் "உசன் உறவுகள்" நிகழ்வில் இவரின் சங்கீதத் திறமையைக் கண்டு பலரும் பாராட்டினர். Toronto இல் உள்ள ஆலயங்களிலும் இவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
செல்வி பிரதிஷ்னியின் இந்த அரங்கேற்றத்தில் கலந்து சிறப்பிக்க வருமாறு அவரின் பெற்றோர், அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள். தனிப்பட்ட அழைப்பிதழ்கள் வழங்கப்படாத நிலையில் இந்த அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிப்பதோடு செல்வி பிரதிஷ்னியின் இசை வெள்ளத்தில் மூழ்க வருமாறு பெற்றோர் கேட்டுக்கொள்கிறார்கள்.
இளம் தலைமுறைக் கலைஞர் ஒருவரின் இந்த அரங்கேற்றத்தில் கலந்துகொண்டு அவருக்கு உற்சாகமூட்டுவதோடு, உங்களின் வாழ்த்துக்களையும் தெரிவிக்கவேண்டுமென உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறது. செல்வி பிரதிஷ்னியின் இந்த அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இவரின் கலைப் பயணம் வெற்றிகரமாகத் தொடர உசன் முருகனைப் பிரார்த்தித்துக் கொள்கிறது.