உசனைசேர்ந்த திரு, திருமதி நவரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும்
திரு திருமதி மதீஸ்வரன் ரஜனி அவர்களின் மகளும்மாகிய செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் September மாதம் 21 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு, சனிக்கிழமை அன்று Toronto, கனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .பிரபல்யம் வாய்ந்த Armenian Youth Centre கலையரங்கில் சங்கீத அரங்கேற்றம் ஆரம்பமானபொது
அரங்கு நிறைந்த ரசிகர்கர்களும் சங்கீத வித்துவான்கள், கலை உலக வித்துவான்கள் , மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களின் முன்னிலையில்
செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் அனைவரையும் இசை வெள்ளத்தில் ஆழ்த்தியது ....
உசனைச்சேர்ந்த இளம் மாணவி புலம்பெயர் தேசத்தில் முறைப்படி சங்கீதம் பயின்று முதல் முறை அரங்கேற்றம் செய்யும் வரை சென்ற பெருமை செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் அவர்களையே சாரும் ...
இவரின் குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் இசை உணர்வும் அரங்கை பூரிக்க வைத்தது .இவரின் தாயார் உசனில் உருவான சங்கீத மேதை ரஜனி நவரட்ணம் ஆவார் தன்னை போன்றே தனது மகளையும் புலம் பெயர் தேசத்தில் உருவாக்கி உசன் மண்ணுக்கு பெருமை சேர்த்தமைக்கு ,திரு,திருமதி .மதீஸ்வரன் ரஜனிஅவர்களுக்கு உசன் மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்
செல்வி பிரதிஷ்னி அவர்கள் ஓம் ஸ்ரீ சக்ர கான சபா அதிபர், சங்கீத பூஷணம், ஸ்ரீமதி கமலாதேவி சண்முகலிங்கம் அவர்களிடம் பல வருடங்களாக முறையாக சங்கீதம் கற்று வருகின்றார் செல்வி பிரதிஷ்னி. சங்கீதம் கற்று வரும் காலங்களில் பல சிறப்பு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் நிகழ்த்தும் "உசன் உறவுகள்" நிகழ்வில் இவரின் சங்கீதத் திறமையைக் கண்டு பலரும் பாராட்டினர். Toronto இல் உள்ள ஆலயங்களிலும் இவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
செல்வி பிரதிஷ்னி அவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களையும் ,தொடர்ந்து சங்கீத பணி தொடர உசன் முருகனையும் வேண்டி நிக்கிறது .....
உசன் இளம் தலைமுறை முன்னேற்றம் கண்டு நாம் பெருமை கொள்கிறோம்