அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, August 9, 2013

கூடிக் குதூகலிக்க கோடையில் ஒரு நாள்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தக் கோடைகால ஒன்றுகூடல் ஞாயிற்றுக் கிழமை, August 11, 2013 அன்று Scarborough, கனடாவில் Neilson Road and Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இடம்பெற இருக்கின்றது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

விளையாட்டுப் போட்டிகளோடு பல்வகை உணவும் பரிமாறப்படும். உங்கள் உறவுகளையும், நட்புக்களையும் சந்தித்து கூடி மகிழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

நடப்பு நிர்வாகசபையின் ஆயுட்காலம் நிறைவுக்கு வருவதால் புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம் பெறும். புதிய நிர்வாகசபைக்கு பொதுச் சேவையை நோக்கமாகக் கொண்டவர்களைத் தெரிவு செய்து இந்த ஒன்றியத்தை மேலும் வலுப்படுத்தி உசனின் வளர்ச்சிக்கு உரமூட்ட வேண்டுமென்று தற்போதைய நிர்வாகசபை வேண்டுகோள் விடுக்கிறது. காலத்தோடு ஒட்டிய புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்தக்கூடிய உறுப்பினர்களைத் தெரிவு செய்து உசனின் வளர்ச்சிக்கு உதவுவோம்.

நிதி சேகரிப்பு நடவடிக்கையாக பொருட்களை ஏலத்தில் விட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்களிடமிருக்கும் புதிய மற்றும் ஓரளவு பாவித்த, நல்ல நிலையில் உள்ள பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு தந்துதவவும். பொருட்களை நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு எடுத்து வரவும்.

அதிர்ஷ்ட லாபச் சீட்டு விற்பனையும் இடம் பெறும். இதற்குரிய பரிசுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்க விரும்புபவர்கள் செயலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும்.

வாருங்கள் மகிழ்ந்திருப்போம்!

-உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா