உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் ஒன்றியத்துக்கான நடைமுறை நிர்வாகசபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாகசபையைத் தெரிவு செயும் பொறுப்பு கனடா வாழ் உசன் மக்களிடம் வழங்கப்பட்டது.
நடைமுறை உறுப்பினர்களில் சிலர் வெளியேற உற்சாகமிக்க இளைய சமுதாயத்தினர் சிலர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நிர்வாகசபையில் இணைக்கப்பட்டனர். இது சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் உற்சாகமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய நிர்வாகசபை தெரிவானது எந்தவித எதிர்க் கருத்தோ போட்டியோ இன்றித் தெரிவாகியது கனடா வாழ் உசன் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டி காட்டி நிற்கிறது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் கனடாவிலும், உசனிலும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அனைவராலும் கருதப்படுகிறது. இது இதுவரை காலமும் இல்லாத பெரும் மாற்றமாக இருப்பதாக சங்கத்தின் தலைவர் திரு. கனகசபை நகுலன் தெரிவித்தார். தொடர்ந்தும் இந்த நிர்வாகக் கட்டமைப்பை வழிநடத்தும் பொறுப்பைத் தான் திறம்பட செயல்படுத்தப் போவதாகவும், எந்த விதமான சவால்களையும் எதிர் கொண்டு கனடாவிலும், உசனிலும் சங்கத்தின் பணியைத் திறம்பட செயற்படுத்தத் தன்னாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு அனைத்துலக உசன் மக்களிடம் இருந்தும் தனக்கு ஆதரவு வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுக்க,
கனடா, லண்டன், சுவிஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து உடனடியாகவே உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்துக்கு நிதி உதவி வழங்க மக்கள் முன்வந்தனர். இது வெற்றியின் முதல் படி என அவர் மேலும் தெரிவித்தார்
புதிய நிர்வாகசபையில் இணைத்துக்கொள்ளப்பட்ட இளைய உறுப்பினர்களான
திரு.ஒப்பிலாமணி விஜயரூபன்
திரு. கனகசுந்தரம் அச்சுதன்
திருமதி. பிரியலதா கேதீஸ்வரன்
ஆகியோருடன் முன்னைய உறுப்பினர்களான
கனகசபை நகுலன்
சுப்ரமணியம் பாஸ்கரன்
வெற்றிவேலு அஜந்தன்
இராஜரத்தினம் உமாபதி
சரவணமுத்து பத்மகாந்தன்
சிதம்பரப்பிள்ளை தயாபரன்
நவரத்தினம் சிவகுமார்
சாந்தினி சிவானந்தன்
ஆகியோரும் நிர்வாக சபையில் இடம்பெறுகின்றனர்.
இந்த நிர்வாகசபைக்கு அனைத்து மக்களும் உதவி புரியுமிடத்தில் மற்றைய சிறிய கிராமங்களை விட எமது உசனை அபிவிருத்தி செய்ய முடியுமென உறுதியாகக் கூறலாம்.