அன்பான அனைத்துலக உசன் வாழ் மக்களே !!!!!
1994 ல்எமது உசன் இளையவர்களால் உருவாக்கப்பட்ட உசன் பொது நூலகம் யுத்தகாலத்தின் பின் மிருசுவில் பகுதிக்கு சென்றது (உசன் மக்களின் உழைப்பில் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் உட்பட )
இது மிருசுவில் மக்களின் ஒற்றுமை மிக்க முயற்சியும் சாவகச்சேரி நகரசபையின் முடிவும் .
யுத்தம் முடிந்த பின் கனடா ஐக்கிய மகள் ஒன்றியம் உசன் மக்களுடன்
இணைந்து உசன் கிராம அபிவிருத்திக்காய் செயல்பட தொடங்கி
இன்று "உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் "
அடிப்படை வசதியோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இதனை உசன் மக்கள்மற்றும் மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்துகின்றனர் ,
எனவே இந்த நூலகத்தை விஸ்தரிக்குமாறு உசன் மக்கள் சார்பாக
கனடா மக்கள் ஒன்றியத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில் ,
இதனை நடைமுறைப்படுத்த எமக்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது .
ஆரம்ப தேவையாக ..
நிரந்தர பணியாளர் சம்பளம்
பாதுகாவல் /நிலைய மேற்பார்வையாளர் சம்பளம்
தகவல் சேமிப்பு கருவி (data system)
நிர்வாக செலவு
தளபாடம்
கணணி கருவிகள்
புத்தககங்கள்
மின்னிணைப்பு திருத்த வேலை
கூரை சிறு திருத்த வேலை
ஆகிய தேவைகள் நிறைவு செய்ய வேண்டியுள்ளதால்
.அனைத்துலக உசன் மக்களிடம் இருந்து உரிமையுடன் உதவி கேட்டு நிக்கிறோம் .
பணமாகவோ பொருளாகவோ தந்துதவுமாறு வேண்டுகிறோம்.
சில உறவுகள் உசன் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர் அவர்களுடன் நீங்களும் இணைத்து .உசன் எதிர்கால சந்ததியின் அறிவு வளர்ச்சிக்கு
உதவுமாறு வேண்டுகிறோம். இதுவரை அனைத்துலகிலும் இருந்து எமக்கு பங்களிப்பு வழங்க முன்வந்தவர்களின் /குடும்பங்களின் விபரம் விரைவில் வெளியிடுவோம் .எனவே வெளிநாடுகளில் இருந்து உசனுக்கு செல்பவர்கள் இவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை நேரடியாக வழங்கமுடியும் .
அது மட்டுமன்றி இந்த நூலக பணி தொடர்பாக உங்கள் கருத்துகள், கேள்விகள்,எதுவாக இருந்தாலும் தயவு செய்து தொடர்பு கொண்டு பரிமாறுங்கள் . மிக விரைவில் உசனில் பிரமாண்டமான நூலகம் அமைய உள்ளது மட்டும் உறுதி .........................
தொடர்புகளுக்கு :' பண்டிதர் சரவணமுத்து " பொது நூலகம் -உசன்
தலைவர் : திருமதி .மீரா தேவரஞ்சன்- 'உசன் -94212050103
கண்காணிப்பாளர் :திரு :சிவானந்தன் -உசன் -94772877799
செயலாளர் : யதி செல்லத்துரை -உசன்-94776108420
பொருளாளர் : காஞ்சி பாலசிங்கம் -உசன்-94777555558
அஜந்தன் வெற்றிவேலு -canada 0014168332120
ஊடக நிர்வாகம் /உசன் அபிவிருத்தி கட்டமைப்பு நிர்வாகம்
அனைத்துலக உசன் மக்கள் ஒருங்கிணைப்பு நிர்வாகம்
"கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் '