அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, July 23, 2013

உசன் மாணவி மாகாணமட்டத்தில் வெற்றி


மாகாணமட்ட பாடசாலை விளையாட்டு போட்டி-2013 இல்
 உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவி செல்வி  இரவிந்திரசர்மா தவநந்தினி அவர்கள் 13 வயது பிரிவு 100m ,200m ஓட்டப்போட்டியில் முறையே 3ம் , 2ம் நிலையை பெற்று பாடசாலைக்கு ம்உசன் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் .
தவனந்தினியின் திறமையை அனைத்துலக உசன் மக்களும் பாராட்டுவதோடு கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம்  எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம் .


நன்றி : உசன் ஸ்ரீ முருகன் விளையட்டுகழகம்


Wednesday, July 17, 2013

"உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக அறிக்கை "


அனைத்துலக உசன் மக்களுக்கும் !!!!!!!!!!

ஆற்றல் மிக்க - நடைமுறை சாத்தியமான - நேர்த்தியான ஊழல் அற்ற செயற்பாடுகளை சமூகத்துக்கு வழங்குவதில் காட்டப்படும் அக்கறை காரணமாக தலை சிறந்த முன்னனி நிலையை எட்டினோம். தங்களின் தொடர்ச்சியான ஊக்குவிப்பும் ஆதரவும் மிகச்சிறந்த அமைப்பாக பரிணமிப்பதற்கு எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களுக்கு ஊன்றுகோலாகவும் பேருதவியாகவும் அமைந்தது. ஒன்றினைந்ததன் மூலம் நாம் மிக அதிகமானவற்றை சாதித்துள்ளதுடன் எமது பாரம்பரியங்கள், விழுமியங்கள் என்பவற்றை விழிப்புடன் பேணும் அதேவேளை எதிர்காலத்தில் நாம் சந்திக்கவிருக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் விதத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் தாங்கள் எமக்கு அளித்துவரும் பொறுப்புக்களை உறுதியுடனும், நேர்மையுடனும், பொறுப்புடனும் செய்வோமென திடமாக நம்புகின்றோம்.

மனதில் இடம் பெறுதல் என்பது பிறவியல்புகளை எல்லாம் தாண்டிய அக அழகின் பரிசு. மனிதனுக்கு மனிதனுடன் மட்டும் அன்றி பிற உயிரினங்களோடும் பாவனை பொருட்களோடும், குறித்த ஸ்தலங்களோடும், இன்ன பிற விடயங்களோடும் ஆத்மார்த்த தொடர்பொன்றை தோற்றுவிக்கும் பிணைப்பு அது தொடர்புறும் பதார்த்தங்கள் மாறுபடுகையில் அந்த உறவுகளுக்கான பெயர்களும் மாறுபடுவது மட்டுமே அன்றி வேறெந்த பெரியதொரு வித்தியாசமும் இணைப்புக்களுக்கிடையில் இருந்ததேயில்லை. மனங்களை வெல்லமுடியாத மன்னனுக்கு மக்களிடத்தில் மதிப்பிருப்பதில்லை மண்ணை வெல்லமுடியாத விதைக்கு பயிர் என்ற பெருமை கிடைப்பதில்லை. புன்னுயிர்களிருந்து பேருயிர்கள் கடந்து பகுத்துயிர்கள் வரை இன்னொரு மனதை வெற்றி கொண்டருளுவது என்பது இலேசுப்பட்ட விடயமொன்றல்ல.

கழகத்தின் உயிர்ப்பின் நோக்கமும் - இயக்கத்தின் விசையும் – வீச்சும் - பொறுப்பும் அவற்றின் பாற்பட்ட சேவையும் ஊரின் தேவையை முன்னிறுத்தி தளராத உணர்வுடன் ஆற்றப்படுபவையே. ஊரின் தேவைகள் நோக்கியும், அதன் அபிவிருத்தி சார் மேம்பாடுகள் கருதியும் உழைப்பதே தனது உன்னதபணி அந்தபணியே தனது உயர்வின் உந்து சக்தி என்பதை நாம் மறந்ததில்லை - மறப்பதற்குமில்லை.

எனவே ஊர் நலன் சார் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதை நோக்காக கொண்டும், இன்றைய உலக சுழற்சியில் தன்னையும் இணைத்துக் கொள்வதை கருத்தில் கொண்டும், புலம் பெயர் உசன் வாழ் மக்களை நினைவில் நிறுத்தியும், ஓர் ஒன்றினைந்த உயர்வான சேவையை எதிர்பார்க்கும் மக்களுக்கு அதனை நனவாக்கும் பொருட்டும், தொடர்பாடலின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டும் எமது பணி சிறக்க ஊர் மகிழ செயற்றிறனை விரிவுபடுத்துவதன் ஓர் அங்கமே மேற்படி எமது இணைவு. ஆதலால் தங்களின் உயர்ந்த பட்ச ஆதரவே அதன் நீட்சியை நோக்கி மேலும் வளர துடிப்புடன் காத்திருக்கும் என்றென்றும் உங்களுடன் உங்களுக்காகவே தம்மை அர்பணித்திருக்கும்.
சிறி முருகன் விளையாட்டுக்கழகம்
உசன்
"காலத்தே செய்யும் பணியே காலத்தை கடந்து நிற்கும்
காலத்தையும் உருவாக்கிவிடும்"

நன்றி


திருமண வாழ்த்துக்கள்

எமது உசன் இணையதளத்தின் உசன் பிராந்திய செய்தி தொடர்பாடல் மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் , உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகளாக முக்கிய உறுப்பினர்  செல்வன் சஞ்சயன் செல்வராசா அவர்கள் திருமண பந்த்தத்தில் இணைந்து கொண்டார் .
திரு திருமதி சஞ்சயன் அவர்களுக்கு கனடா உசன் மக்கள் ஒன்றியம் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
திரு திருமதி சஞ்சயன் அவர்களே ... இல்லறவாழ்வில் நன்றே வாழ்க
                                                             உசன் மக்களுக்கு உங்கள் பணி தொடர்க ...



Tuesday, July 16, 2013

திருமதி. ஜோதிலக்ஷ்மி விவேகானந்தன்

உசனைப் பிறப்பிடமாகக் கொண்ட விடத்தற்பளை கண்ணகை அம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தா காலஞ்சென்ற திரு. வேலுப்பிள்ளை, திருமதி. மகேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களின் மருமகள் திருமதி ஜோதிலக்ஷ்மி விவேகானந்தன் அவர்கள் கொழும்பு, இலங்கையில் காலமானார்.

அன்னார் மல்லாகத்தைச் சேர்ந்த செனட்டர் நடராஜா, திருமதி. நடராஜா ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு. விவேகானந்தன் (Commercial Bank, Colombo, Sri Lanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மசுதன்(UK), Dr. தயாளசுதன்(கனடா), பரிதீபன்(தீபன், Commercial Bank, Colombo, Sri Lanka) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் வியாழக்கிழமை, July 18, 2013 அன்று கொழும்பில் தகனம் செய்யப்படும். உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
பரிதீபன் (தீபன்) - +94-77-739-6313
39/3 1/1 B Fussels Lane, Colombo 6, Sri Lakna


Wednesday, July 3, 2013

மரண அறிவித்தல்

உசனைசேர்ந்த திரு.உமாபதி இராஜரட்ணம் (Go Transit -Canada) அவர்களின் மாமனார்  திரு.மயில்வாகனம் முருகையா அவர்கள் 03-07-2013 புதன்கிழமை அன்று டொராண்டோவில் இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார் யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோ, மார்க்கத்தை வதிவிடமாகவும் கொண்டவர்

,அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் மருமகனும்,
அன்னபூரணம்(சின்னக்கிளி) அவர்களின் அருமைக் கணவரும்,

சிவகுமாரன்(வானம்பாடிகள் இசைக்குழு, கனடா), கேமலதா, ராஜ்குமார், பிறேமலதா, நரேஷ்குமார், கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சிவக்கொழுந்து, வள்ளியம்மை மற்றும் தெய்வானை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தினி, உமாபதி(GO TRANSIT-CANADA), காயத்ரி, ஜெயச்சந்திரன், குமரதாசன்(தாசன்), தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆருரன், ஆதிரை, சங்கீத், சங்கவி, சஞ்ஜீவ், ரஜீத், கரிஸா, அனிகா, அபினா ஆகியோரின் அருமைப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் July 5, 2013, வெள்ளிக்கிழமை அன்று பி. ப. 5 மணி முதல் இரவு 9 மணிவரையும், பின்னர் July 6, 2013, சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் காலை 9 மணிவரையும் Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இறுதிக் கிரியைகள் July 6, 2013, சனிக்கிழமை அன்று நண்பகல் 12 மணிக்கு 226 Kingston Rd, Toronto, M4L 1S7, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் St.John's Cemetery Norway இல் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொற்றக் குடையிழந்தோம்
வெண்கலக் குரலிழந்தோம்
ஏந்தலை எம் தலைவா
சுற்றம் சுடர வைத்து
கொலுவிருந்த கொற்றவனை
வற்றுமே எங்கள் சோகம்
எம் தலைமுறையின் தலைமகனை

தகவல்
குடும்பத்தினர்
உமாபதி (கனடா)செல்லிடப்பேசி +1-647-869-2441
சிவா (கனடா)செல்லிடப்பேசி +116472849132
நரேஷ் (கனடா)செல்லிடப்பேசி +19055340191