அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, June 26, 2013

உசனில் உதயமாகியது "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்"


கடந்த வருட காலமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும், உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் மற்றும் உசன் இளையோரும், மேற்கொண்ட அயராத முயற்சியின் பயனாக உசனில் உருவாகியது "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்".
பல தடைகளை கடந்து உண்மையான உசன் உணர்வாளர்களின் முயற்சியில், உசன் இளையவர்களின் அர்ப்பணிப்பில் உருவாக்கம் பெற்று இன்று வணக்கத்துக்குரிய சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களின் ஆசிர்வாத பூசையைத் தொடர்ந்து, நூலக நிர்வாகசபையின் புதிய தலைவர் திருமதி மீரா தேவரஞ்சன் அவர்களும், முன்னாள் விஞ்ஞான ஆசிரியர் திரு. ஸ்ரீகாந்தன், மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் மங்கள விளக்கேற்ற, உசன் வாழ் எதிர்கால சந்ததி மேல் பற்று கொண்ட மக்களும், உசன் பாடசாலை மாணவர்களும் கலந்திருக்க "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


அடிப்படை வசதியுடன் தினசரிப்பத்திரிகை உடன் மட்டுமே ஆரம்பிக்கப்பட இந்த நூலகத்துக்கு முன்னாள் விஞ்ஞான ஆசிரியர் திரு. ஸ்ரீகாந்தன், உசன் பாடசாலை முன்னாள் அதிபர் திரு. பேரம்பலம் அவர்களின் மகள் திருமதி துஸ்யந்தி மிகுந்தன் ஆகியோர் மட்டுமே பத்திரிகை நன்கொடை வழங்க முன்வந்துள்ளனர்.
இருப்பினும் இதனை முழுமையான நூலகமாக மாற்ற எமக்கு இன்னும் ஆதரவும், உதவிகளும் தேவைபடுகிறது. அனைத்துலகிலும் வாழும் நல்லுள்ளம் கொண்ட உசன் வாழ் மக்கள் தயவு செய்து உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இந்த நூலகத்துக்கு தினசரி பத்திரிகை, வாராந்த பத்திரிகை, ஆங்கில பத்திரிகை, மற்றும் வாராந்த, மாதாந்த சஞ்சிகைகள், அதைவிட ஒரு அலுவலக பணியாளர் வேதனம், ஒரு நிர்வாக பாதுகாவலர் வேதனம் ஆகியற்றுக்கான உதவிகள் தேவைபப்டுகிறன. உசன் கல்வியறிவை, உங்கள் குடும்பமாக நினைத்து உதவி புரியுமாறு உசன் வாழ் மக்கள் சார்பாக வேண்டுகிறோம். எம் உசன் ஊர் மீது பற்றுள்ளவர்கள் உடனடியாக எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றியுடன்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா செயலாளர் திரு. சுப்பிரமணியம் பாஸ்கரன்
+1 647 448 7434