அன்பான அனைத்துலக உசன் வாழ் மக்களே!
கடந்த 3 வருட காலமாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்வாகசபை உசன் கிராமத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சி செய்தது. இதற்கு உசன் மேல் பற்றுள்ள பலரும் கை கொடுத்தனர். அத்தோடு பல நிறுவனங்களும் உசன் அபிவிருத்திக்கு உதவத் தயாராக இருந்தன. இருப்பினும் சர்வதேச பொது நிறுவனங்களின் வேண்டுகோள் என்னவெனில், ஒரு திட்டத்தை செயற்படுத்தி காட்டினால் அது குறித்து அவர்கள் தமது உதவியை எமது உசன் மக்களுக்கு வழங்க முடியும் என்பதே. இதனை எமக்கு உதவி புரியும் சில அன்பர்களுக்கு தெரிவித்தோம்.
அதன் அடிப்படையில் வந்ததே "உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்". இப்பொழுது பல இடர்களுக்கு மத்தியில் இராணுவக் கட்டுபாட்டில் இருந்த அந்த வீட்டை மீட்டு சிரமதானம் செய்து இயங்குவற்குத் தயார் நிலையில் உள்ளது. எமது திட்டப்படி இந்த நூலகத்தை இயக்க பண உதவி தேவைப்படுகிறது. கனடா வாழ் மக்களிடம் சேர்க்கப்பட்ட பணத்தை கொண்டு கட்டிட புனரமைப்பு முடிவடைந்த நிலையில் தொடர்ந்தும் கனடா வாழ் மக்களே உசன் புனரமைப்பில் பங்களிப்பு செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
அன்பான அனைத்துலக உசன் வாழ் மக்களே! உங்களால் முடிந்த சிறிய உதவியையேனும் எமக்கு வழங்கினால் எமது பணியைத் தொடர முடியம். இல்லையேல் பல சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி இடை நடுவில் நின்று போகும் அவலம் ஏற்படும். எனவே இந்த அவசர தேவைக்கு உங்களால் முடிந்த உதவியை மிக விரைவாகச் செய்யுமாறு அன்போடு வேண்டி நிற்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா. ஒன்றியத்தின் செயலாளர் பாஸ்கரன் அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இந்த நற்பணியை நீங்கள் ஆற்ற முடியும்.
உங்களின் பங்களிப்பு இன்றி ஒன்றியத்தால் எதுவும் செய்ய முடியாது. இதுவரை செய்த எல்லா முயற்சிகளும் பயனற்றுப்போக விட்டுவிடாதீர்கள். அது மட்டுமன்றி நாம் சர்வதேச நிறுவனங்களுடன் பேசி கேட்ட உதவிகளும் கிடைக்காமல் போக இடமளியாதீர்கள். எமக்கு பல வழிகளில் அனைத்துலக நாடுகளில் இருந்து பல உசன் அன்பர்களின் முயற்சியால் அந்த நாட்டு அரசாங்க தரப்பில் இருந்தும் உசன் அபிவிருத்திக்கு உதவிகள் கிடைக்கவிருந்தன. ஆனால் நாம் முதலில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஒரு செயற்திட்டத்தைச் செய்துமுடிக்க வேண்டும். அதற்கு இந்த "பண்டிதர் சரவணமுத்து பொது நூலக" திட்டத்தைச் செயற்பபடுத்திக் காட்டுவோம், வாருங்கள்.
நோர்வே வாழ் திரு. அம்பலவாணர் ஜெயதேவன் அவர்கள் உசனில் உருவாக்க முயற்சித்த முதியோர் நலன் காப்பகம் உசன் மக்களின் பங்களிப்பின்மை காரணமாக இடையில் நின்றுபோயுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். தவிர அவரின் பல இலட்சம் பணமும் தேக்கமான நிலையில் உள்ளது. இந்த நிதி மிக விரைவில் கொடிகாமத்துக்கு சேரவுள்ளது என்றும் அறிகிறோம். இந்த நிலை தொடர இடமளியாதீர்கள்.
நன்றி
தொடர்புகளுக்கு:
செயலாளர் பாஸ்கரன்: +1 647 448 7434