இராணுவ பாவனையில் இருந்த பண்டிதர் சரவணமுத்து அவர்களின் வீடு
சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களால் பெற்றுகொடுக்கப்பட்டத்தை தொடர்ந்து .
இராணுவ நிர்வாகத்தின் சில வேண்டுகோள்களும் முடிவடைந்த நிலையில் .
முழுமையான "உசன் பண்டிதர் பொதுநூலக நிர்வாக சபையின் கட்டுப்பாட்டின் கீழ் நேற்றைய தினம் கட்டிடத்தை புனரமைக்கும் பணி எமது நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டுள்ளது .
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்
திரு .பத்மன் சரவணமுத்து அவர்கள் நேரடியாக உசனில் நின்று பணியை கண்காணித்து ஒழுங்கமைத்து வருகிறார்.
எமது சங்கத்திலிருந்த மிகசிறிய நிதி தொகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சிக்கு தொடர்ந்து நிதியுதவி மற்றும் புத்தகங்கள் தளபாடங்கள் பத்திரிக்கை ,சஞ்சிகை ,நாவல் போன்றவற்றுக்கான ஆதரவு
தேவைப்படுகிறது .
அனைத்துலகிலும் வாழும் உசன் மக்களே ...
இந்த அறிவியல் பணிக்கு உங்கள் பங்களிப்பை நாடி நிக்கிறோம்.
உசனுக்கு கிடைக்கபெற்ற இந்த நல்ல உதவியை சரியான முறையில் நெறிப்படுத்த அனைவரின் பங்களிப்பையும் வேண்டுகிறோம்.
உங்களின் ஒவ்வொரு சிறிய உதவியும் உசன் வாழ் எதிகால சந்ததிக்கு பெரும் விருட்சமாக அமையும்.
தொடர்புகளுக்கு ; 94777174446,0776108420,94776578032
கனடா -பாஸ்கரன் :0016474487434
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்