அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, April 22, 2013

உசன் பாடசாலை நிர்வாகம் விடுக்கும் அவசர உபகரண உதவி

பல கல்விமான்களை உருவாக்கி உலகெல்லாம் உங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் உங்கள் கல்வித்தாய், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், உங்களிடம் அவசர உபகரண உதவி வேண்டி நிற்கிறது.

இந்த காலகட்டத்தில் பல நவீன உபகரணங்களை யாழ் மாவட்டத்தின் பல பாடசாலைகளும் பயன்படுத்தி வரும் நிலையில், கிராமப்புறத்தில் இருக்கும் எமது படசாலைக்கு உதவிகள் மிக அரிதாகவே கிடைக்கிறது. அதிலும் கல்வி அமைச்சிடம் கேட்கப்படும் உதவிகளுக்குக்கூட மிக நீண்ட காலம் தாழ்த்தியே பதில் தரப்படுகிறது. இந்த நிலையில் எமது மாணவர்களின் கல்வியையும் மற்றைய பாடசாலைகளின் தரத்திற்கு கொண்டுவருவதற்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது. எமது தேவையை நாம் உங்களிடம் மட்டுமே உரிமையுடன் கேட்க முடியும். நீங்கள் எமது பிள்ளைகள். எனவே எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படும்
1. Photo Copy Machine
2. Multimedia Projector
ஆகியவற்றைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

இவற்றின் அண்ணளவான பெறுமதி
1. Photo Copy Machine ...... Rs.150,000.00
2. Multimedia Projector ...... Rs.95,000.00

எமது பாடசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருபவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அஜந்தன் வெற்றிவேலு (பொருளாளர்- கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்) +1-416-833-2120
த.சோதிலிங்கம் (அதிபர் -உசன் இராமநாதன் மஹா வித்தியாலயம்) +94-77-370-0155
"என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"