அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, April 26, 2013

திருமதி.செல்லாச்சி இராமலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்


உசன் பண்டிதர் சரவணமுத்து பொதுநூலக நிர்வாகசபை தலைவர்
திரு.இ.முருகதாசன் அவர்களின் அன்புத் தாயார்
திருமதி.செல்லாச்சி இராமலிங்கம் அவர்கள்  ஏப்பிரல் மாதம் 4 ம் திகதி
உசனில் காலமானார் .
    அன்னார் திரு.இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் முருகதாசன்
அவர்களின் அன்புத்தாயாரும் , சர்மிளா அவர்களின் மாமியாரும்
மற்றும் ஜதுர்சன் தனுசிகன் ஆகியோரின் பாசமிகு  பேத்தியாரும் ஆவார் .

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் உசனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது .
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் ,

அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மசாந்தியடைய  அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வேண்டுகிறோம் .

தகவல் : மகன் , முருகதாசன்- உசன் 94771320013




Monday, April 22, 2013

உசன் பாடசாலை நிர்வாகம் விடுக்கும் அவசர உபகரண உதவி

பல கல்விமான்களை உருவாக்கி உலகெல்லாம் உங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் உங்கள் கல்வித்தாய், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், உங்களிடம் அவசர உபகரண உதவி வேண்டி நிற்கிறது.

இந்த காலகட்டத்தில் பல நவீன உபகரணங்களை யாழ் மாவட்டத்தின் பல பாடசாலைகளும் பயன்படுத்தி வரும் நிலையில், கிராமப்புறத்தில் இருக்கும் எமது படசாலைக்கு உதவிகள் மிக அரிதாகவே கிடைக்கிறது. அதிலும் கல்வி அமைச்சிடம் கேட்கப்படும் உதவிகளுக்குக்கூட மிக நீண்ட காலம் தாழ்த்தியே பதில் தரப்படுகிறது. இந்த நிலையில் எமது மாணவர்களின் கல்வியையும் மற்றைய பாடசாலைகளின் தரத்திற்கு கொண்டுவருவதற்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது. எமது தேவையை நாம் உங்களிடம் மட்டுமே உரிமையுடன் கேட்க முடியும். நீங்கள் எமது பிள்ளைகள். எனவே எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படும்
1. Photo Copy Machine
2. Multimedia Projector
ஆகியவற்றைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

இவற்றின் அண்ணளவான பெறுமதி
1. Photo Copy Machine ...... Rs.150,000.00
2. Multimedia Projector ...... Rs.95,000.00

எமது பாடசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருபவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அஜந்தன் வெற்றிவேலு (பொருளாளர்- கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்) +1-416-833-2120
த.சோதிலிங்கம் (அதிபர் -உசன் இராமநாதன் மஹா வித்தியாலயம்) +94-77-370-0155
"என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"




Sunday, April 14, 2013

செயலாளர் பாஸ்கரன் அவர்களின் நன்றி செய்தி ....


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த உசன் உறவுகள்  நிகழ்வில் அமைப்பின் செயலாளர் திரு சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்கள்
வழங்கிய நன்றி கலந்த  செய்தி






Friday, April 5, 2013

"TIMO STAR TEX" புதுக்கடை திறப்பு விழா

உசன் கிராமத்தில் அமைக்கப்பட இருக்கும் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்திக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான .
"Timo Star Textiles" எனும் புடவை நிறுவனம் . Markham and Elson பகுதியில் பிரமாண்டமான காட்சியறை ஒன்றை ஆரம்பிக்கிறார்கள் .

நாளை சனிக்கிழமை ஏப்பிரல் 06 ம திகதி காலை 8 மணிக்கு  டொரோண்டோ மாநகரில் உள்ள  Markham and Elson பகுதியில் உள்ள 80 Elson St, Unit#6  ல்  பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெறவுள்ளது . அன்றைய தினம் 
மிக மலிவு விலையில் ஆடைவகைகளை வழங்குவதுடன் சிறப்பு பரிசுப்பொருட்களும் 
வழங்கவுள்ளனர் . கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் கூட இன்னும் சந்தைக்கு
 வராத புதிய ஆடைவகைகளும் வந்துள்ளன .
இன் நிறுவனம் பொதுவான கழிவு விலை தவிர்த்து நீங்கள் உசன் மக்கள் ஒன்றிய அங்கத்தவர் என 
அறிமுகபடுத்துமிடத்தில் உங்களுக்கு மேலும்  சில சலுகைகளை பெற்று கொள்ள முடியும் .

நீங்கள் இவர்களிடம் ஆடைகளை வாங்கும் பொது அதில் ஒரு பகுதி உசனில் அமைக்கும் 
நூலகத்துக்காக "Timo Star Textiles" நிறுவனம் வழங்க உள்ளது .
இன் நிறுவனத்துக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது .