உசன் பண்டிதர் திரு சரவணமுத்து குடும்பத்தினர் உசனில் ஒரு பொது நூலகம் அமைப்பதற்காக தமது வீட்டை நன்கொடையாக வழங்கியிருந்தனர் .
இவ்வளவு காலமும் இராணுவ பாவனையில் இருந்த வீட்டை யாழ் மாவட்ட இராணுவத்தளபதி பிரிகேடியர் ஹத்துருசிங்க அவர்களால் உசன் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது .
திறப்பு கையளித்தல் |
உசன் முருகன் கோவிலில் சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களினால் நடாத்தப்பட்ட மகா ஸ்கந்த ஹோம நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி பிரிகேடியர் ஹத்துருசிங்க அவர்களால் .வீட்டு திறப்பு
உசன் மக்கள் முன்னிலையில் .பண்டிதர் சரவணமுத்து பொது நூலக
நிர்வாக குழுவிடம் உத்தியோக பூர்வமாக வழங்கப்பட்டது .
நிர்வாகசபை உறுப்பினர்கள் |
இன் நிகழ்வில் சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்கள் .சிவ ஸ்ரீ சுந்தரெசகுருக்கள் மற்றும் Dr.ஜெபனாமகனேசன் திரு.சிவானந்தன் ஆகியோருடன் நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் உசன் மக்களும் கலந்திருந்தனர்
பிரிகேடியர் ஹத்துருசிங்க |
உசனில் பொது நூலகம் அமைக்கும் இந்த முயற்சிக்கு நீண்ட காலம் தடையாக இருந்த இந்த விடயத்தை வெற்றியுடன் நிறைவுபெற முன்நின்று உழைத்த உசன் கந்த சுவாமி கோவிலின் பிரதம குரு சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களுக்கும் . எம்மோடு பக்கபலமாய் இருந்தவர்களுக்கும் .
இந்த வீட்டை உசன் மக்களுக்காக இராணுவ பாவனையில் இருந்து தந்த
யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி பிரிகேடியர் ஹத்துருசிங்க அவர்களுக்கும் .எமது மனமார்ந்த நன்றிகள் .
தொடர்ந்து நடைபெறவிருக்கும் விடயங்கள் தொடர்பாக பொது நூலக நிர்வாக குழுவும் , கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் , நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .