அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, March 27, 2013

"பண்டிதர் வீட்டில்"பொது நூலக முதல் கூட்டம்


உசனில் அமைய விருக்கும் பண்டிதர் சரவணமுத்து  பொது நூலகத்திற்கான
முதல் கூட்டம் . இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பண்டிதர் ஐயா அவர்களின் வீட்டில் உத்தியோக பூர்வமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது .
திரு.கமலதாஸ்,தலைவர் திரு ,முருகதாஸ் .மகிந்தன் 
மங்களகரமாக நிறைகுடம் வைத்து விளக்கேற்றி இந்த கூட்டம் ஆரம்பமானது Dr.ஜெபணாம கணேஷன் ,திரு சிவானந்தம் ,ஆகியோரின் வழிநடத்தலில் .
திரு கு.விமலதாஸ் திரு கு.கமலதாஸ் ஆகியோரின் கண்காணிப்பிலும்
சரவணமுத்து பொது நூலக நிர்வாகசபை கூடியது .
நூலகத்துக்கான வீடு கிடைக்கபெற்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவரும் பகிர்ந்து கொண்டதுடன் . தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய
நடவடிக்கைகள் , குறித்தும் அதற்கான நிதியை பெறுவது குறித்தும் ஆராயப்பட்டது .
லஜன் ,பிரபா,Dr.கணேஸ் ,திரு.சிவானந்தன் 
உடனடி தேவையான பத்திரிகை ,சஞ்சிகை பகுதியை  தொடங்குவது எனவும்
அதற்குரிய மேசை தயாரிப்புக்கு தேவையான பலகையை .
உசன் ஆலய தர்மகர்த்தா திரு.கு .விமலதாஸ் அவர்கள் உடனடியாக மனமுவந்து வழங்கினார் .
தொடங்க இருக்கும்  இந்த பொது நூலகத்துக்கு நிதியுதவி வழங்கி எமது கிராமத்து எதிகால சந்ததியின் அறிவினை பெருக்க அனைத்துலக உசன் மக்களும் முன்வர  வேண்டுமென  வேண்டு கொள் விடுக்கபட்டது.
இறுதியில் இந்த வீட்டை பெற்றுக்கொள்ள உதவிய சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களுக்கும் உறுதுணையாய் செயல்பட்டவர்களுக்கும் நன்றி
தெரிவிக்கப்பட்டது .
பொது நூலக தலைவர் திரு.முருகதாஸ் 

திரு.கு.விமலதாஸ் ,திரு.பகீரதன் 



Thursday, March 21, 2013

"உசன் பொது நூலகத்திற்கான" வீடு இராணுவத்தினரால் கையளிப்பு


உசன் பண்டிதர் திரு சரவணமுத்து குடும்பத்தினர் உசனில் ஒரு பொது நூலகம் அமைப்பதற்காக தமது வீட்டை நன்கொடையாக வழங்கியிருந்தனர் .
இவ்வளவு காலமும் இராணுவ பாவனையில் இருந்த வீட்டை யாழ் மாவட்ட இராணுவத்தளபதி பிரிகேடியர் ஹத்துருசிங்க அவர்களால்  உசன் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது .
திறப்பு கையளித்தல் 
உசன் முருகன் கோவிலில் சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களினால் நடாத்தப்பட்ட மகா ஸ்கந்த ஹோம நிகழ்வில்  கலந்து கொண்ட யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி பிரிகேடியர் ஹத்துருசிங்க அவர்களால் .வீட்டு திறப்பு  
உசன் மக்கள் முன்னிலையில் .பண்டிதர் சரவணமுத்து பொது நூலக 
நிர்வாக குழுவிடம் உத்தியோக பூர்வமாக  வழங்கப்பட்டது .
நிர்வாகசபை உறுப்பினர்கள் 
இன் நிகழ்வில் சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்கள் .சிவ ஸ்ரீ  சுந்தரெசகுருக்கள் மற்றும் Dr.ஜெபனாமகனேசன் திரு.சிவானந்தன் ஆகியோருடன் நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் உசன் மக்களும் கலந்திருந்தனர் 
பிரிகேடியர் ஹத்துருசிங்க 
உசனில் பொது நூலகம் அமைக்கும் இந்த முயற்சிக்கு நீண்ட காலம்  தடையாக இருந்த இந்த விடயத்தை வெற்றியுடன் நிறைவுபெற முன்நின்று உழைத்த உசன் கந்த சுவாமி கோவிலின் பிரதம குரு சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களுக்கும் . எம்மோடு பக்கபலமாய் இருந்தவர்களுக்கும் .
இந்த வீட்டை உசன் மக்களுக்காக இராணுவ பாவனையில் இருந்து தந்த 
யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி பிரிகேடியர் ஹத்துருசிங்க அவர்களுக்கும் .எமது மனமார்ந்த நன்றிகள் .

தொடர்ந்து நடைபெறவிருக்கும் விடயங்கள் தொடர்பாக  பொது நூலக நிர்வாக குழுவும் , கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் , நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .








Saturday, March 9, 2013

மரண அறிவித்தல்.


திருமதி தங்கமணி சிவபாதசுந்தரம் (சிவம்)

வடமராட்சி வதிரியைப் (அம்மன் கோவிலடி) பிறப்பிடமாகவும், உசனைப் புகுந்த இடமாகவும் கொண்டு Germany இல் வசித்து வந்த திருமதி தங்கமணி சிவபாதசுந்தரம் அவர்கள் March 8, 2013 அன்று இறை பதம் எய்தினார்.

அன்னார் திரு பெரியதம்பி (பெரியார்) சிவபாதசுந்தரம் (சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற பெரியதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மணிமேகலா (மதி, கனடா), சிவரூபி (Switzerland), முரளீதரன் (Germany), கௌரி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷ்யந்தன் (கனடா), செயந்தன் (Switzerland), தபோதினி (Germany), பிரதீபன் (கண்ணன், கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,

மாளவிகா, வசீகரன், வர்சிகா, சர்விகா, கெளதம், அஜய் ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை 13/03/2013 அன்று பி.ப. 2 மணி முதல் பி.ப. 5 மணி வரை Haus des Abschieds,Unterer Dorrenberg-11, 42105, Wuppertal, Germany என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும். மறுநாள் வியாழக்கிழமை 14/03/2013 அன்று மு.ப. 11 மணி முதல் பி.ப. 2 மணிவரை Friedhofsamt Unterbarmen, Am Unterbarmer Friedhof 16, 42285 Wuppertal, Germany என்ற முகவரியில் கிரியைகள் நடைபெற்று, அதே முகவரியில் பி.ப. 2 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவபாதசுந்தரம் (சிவம்) +49 20249 38117
மதி +1 416 292 2466
முரளி (செல்லிடப்பேசி) +49 17656 389905