உசன் இராமநாதன் மஹா வித்தியாலய ஆசிரியை திருமதி : பேரம்பலம் தங்கம்மா டீச்சரின் மறவு குறித்து கனடா வாழ் உசன் மக்களும் பழைய மாணவர்களும் கலந்திருந்த மலரஞ்சலி நிகழ்வு நடை பெற்றது
இந்த நிகழ்வின் சில பதிவுகள் இங்கே
கனடாவில் வாழ்ந்து வரும் உசன் கிராமத்தை சேர்ந்த மாணவர்களில் ,பல்கலை கழக கல்வியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு ,
அவர்களின் திறமை, முயற்சி ஆகியவற்றை பாரட்டவும் அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் முகமாகவும் ,
அந்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து நிகழ்வு ஒன்றை
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் நிகழ்த்தியது .
கனடா வில் இவ்வாறான திறமையுள்ள மாணவர்கள் பலர் இருப்பினும்
எமது அழைப்பை அன்புடன் ஏற்றும் கனடா வாழ் உசன் மக்களுக்கு மதிப்பளித்தும் இப்பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்ட சில மாணவர்களுக்கு
கனடா உசன் மக்கள் முன்னிலையில் கௌரவம் வழங்கி பாராட்டப்பட்டது .
இன் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தமது முயற்சியின் அனுபவங்களை அனைவருடனும் பகிந்து கொண்டது இளைய சமுதயதினருக்கு இன்னும் உற்சாகமாக அமைந்திருந்தது .
அதை விட தமது கல்வி வாழ்க்கையில் பக்க பலமாய் இருந்த தமது பெற்றோருக்கும் நன்றி செலுத்திய உணர்வு அனைவரயும் மனம் நெகுள வைத்தது . அதை விட ஒரே மேடையில் உசனை சேர்ந்த பல "கனேடிய பட்டதாரி மாணவர்களை" பார்த்தது மிகவும் பெருமையாக இருந்தது . இவ்வாறு திறமையுள்ள மாணவர்கள் இலை மறை காயாக இருப்பதை உசன் ஒன்றியம் வெளிக்கொணர்ந்த இந்த முயற்சி எதிர் காலத்திலும் தொடர்ந்தும் இடம் பெற அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும்
இன் நிகழ்வின் வீடியோ பதிவை இங்கே காணலாம் .
கனடாவில் எமது உசன் ஊர் பெருமை குறித்து ... டொரோண்டோ வணக்கம் FM வானொலியில் 8 ம் திகதி வெள்ளிகிழமை கனேடிய நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடை பெறும்"நம்ம ஊரை போல வருமா " நிகழ்வில் பேசவிருக்கிறார்கள் . இன் நிகழ்வை கேட்பதுடன் உங்களுக்கு தெரிந்த எமது கிராமத்தின் தகவல்ககையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உசனை சேர்ந்த திரு.திருமதி.க.பேரம்பலம் அவர்களின் பேத்தி செல்வி மிதுரிகா அவர்கள்.ஆசியமட்ட பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளனர்.
மிதுரிகா மிகுந்தன்
2012ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி உயிரியல் பிரிவு மாணவியான உசனை சேர்ந்த மிதுரிகா மிகுந்தன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சிவசுப்பிரமணியம் பவித்திரன் ஆகியோரே ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்வதற்காக செல்லவுள்ளனர்.
இலங்கையிலிருந்து இவர்களுடன் மேலும் சில மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இந்தோனேஷியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாணவர்கள் இந்த மாதம் கல்வி அமைச்சினால் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இரண்டு வார காலம் அங்கு அவர்கள் போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் மிதுகா வெற்றி பெறவும்.சிறப்பாக போட்டியிடவும்
அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
உசனை சேர்ந்த முன்னாள் அதிபர் ஆசிரியர் திரு திருமதி க.பேரம்பலம் அவர்களின் பேத்தி செல்வி மிதுரிகா மிகுந்தன் அவர்கள் க.பொ.த.உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3 A சித்தியினை பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இவரின் பெற்றோர்களான திரு திருமதி மிகுந்தன் துஷி ஆகியோர் யாழ் பல்கலைகழக முதுநிலை விரிவுரையாழர்கள் ஆவர்
செல்வி மிதுரிகா கல்வியில் இன்னும் மிளிர உசன் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாக எமது வாழ்த்துக்கள்.
வெளியாகிய பெறுபேறுகளின் ஏனைய விபரம் மிக விரைவில் தரப்படும்
அண்மையில் வெளியாகிய கடந்த வருட க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் .யாழ் மாவட்ட ரீதியில் உசனை பூர்வீகமாக கொண்ட மூன்று மாணவர்கள் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளனர் .
கிடைக்கபெற்ற தரவுகளின் அடிப்படியில் .
உயிரியல் துறையில் யாழ் மாவட்டத்தில் 3A சித்திகள் பெற்று முதலாம் இடத்தில் உசனை சேர்ந்த முன்னாள் அதிபர் ஆசிரியர் திரு திருமதி க.பேரம்பலம் அவர்களின் பேத்தி செல்வி மிதுரிகா மிகுந்தன் அவர்களும்
மாவட்ட ரீதியில் பத்தாம் இடத்தில் உசனை சேர்ந்த திரு திருமதி நவரத்தினம் உமாமகேஸ்வரி தம்பதிகளின் பேத்தி செல்வி மாதங்கி நவக்குமார் அவர்களும் ,
மாவட்ட ரீதியில்23வது இடத்தில் உசனை சேர்ந்த திரு திருமதி சரவணமுத்து அவர்களின் பேரன் விதுர்ஷன் யோகராஜா அவர்களும்
இடம் பிடித்துள்ளனர் .
இந்த மாணவர்களுக்கும் .
இந்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளும்.
இவர்களின் சாதனையால் உசன் மக்களாகிய நாமும் பெருமை கொள்கிறோம் .
வாழ்த்துக்கள்