உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடாவின் "உசன் உறவுகள் 2012" நிகழ்வு January மாதம் 19 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. ஒன்றியத்தின் தலைவர் கனகசபை நகுலனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வை ஓய்வு பெற்ற அதிபர் மாணிக்கம் பரமநாதன் அவர்கள் குத்து விளக்கை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் பல சிறப்பான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. உசனைச் சேர்ந்த பல சிறியவர்களும், இளையவர்களும் இந்த நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இந்த வருட நிகழ்வின் சிறப்பு அங்கமாக பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக்கொண்ட உசன் மண்ணின் இளையவர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். இது ஒரு சிறந்த முயற்சி என்று பலரும் கருத்துக் கூறினர்.
தடைப்பட்டுப் போயிருக்கும் நூலக முயற்சி மற்றும் முதியோர் நலன் காப்பகம் குறித்தும் நிர்வாக சபையினால் விளக்கம் அளிக்கப்பட்டது. உசன் இராமநாதன் மகா வித்தியாலய ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்கான கட்டடத் தேவை குறித்து பாடசாலை அபிவிருத்திச் சபையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்தும் உசன் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
August மாதம் 11 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை கோடை கால ஒன்றுகூடலில் மீண்டும் சந்திப்போம் என்ற அறிவித்தலோடு "உசன் உறவுகள் 2012" இனிதே நிறைவுற்றது.
இந்த நிகழ்வின் நிழற்படங்களை
இங்கே அழுத்துவதன் மூலம் காணலாம்.