அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, June 7, 2012

பண்டிதர் சின்னத்தம்பி சரவணமுத்து அவர்களின் ஓராண்டு நிறைவாஞ்சலி!



பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் திரு சின்னத்தம்பி சரவணமுத்து அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டு ஒன்று ஓடிவிட்டது. காலம் எவ்வளவு விரைவாக எம்மைக் கடந்து செல்கிறது! அன்னாரின் பிரிவு நேற்றுபோல் இருக்கிறது. தாங்க முடியாத இழப்பை எப்படியோ தாங்கிக் கொண்டு அவரின் நினைவுகளோடு ஒன்றிப்போய் இருக்கிறோம். இந்த ஓராண்டு நிறைவில் அவர் தம்மை நினைவு கொள்கிறோம்!

-குடும்பத்தினர்.

ஓராண்டு உருண்டோட உம்நினைவில் நாமுள்ளோம்.
ஊரார் உவந்துரைக்கும் உத்தமனாம் பண்டிதரே!
தாராள சிந்தனையில் தரணியுள்ளோர் பெருவாழ்வில்
பாராண்ட மன்னர்போல் பத்திராமாய்ப் பணிசெய்தீர்!

உங்கள் பிள்ளைகளாய் உலகினிலே சிறப்பாக
எங்கள் வாழ்வமைய என்ன தவம் செய்துவிட்டோம்!
தங்கள் மனைவியாகத் தவம் செய்தேன் நாயகனே
பங்காளர் மருமக்கள் பேரரெனப் பெருமை கொண்டோம்!

சிவலோகச் செந்நெறியில் சேரவென்று சேவித்தோம்.
பரலோக பாக்கியங்கள் பௌத்திரமாய்ப் பெற்றுடுவீர்!
திரிலோக நாயகனாம் சிவன் தாளில் சேர்ந்திருப்பீர்
புவிலோக நம்வாழ்வில் நினைத்திருப்போம் எந்நாளும்!

ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!