உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் உசன் மக்கள் அயலூர் மக்கள் மற்றும் உறவினர்கள் இம் மலரஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய தலைவர் திரு கனகசபை நகுலன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் .அதனை தொடர்ந்து அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டி
கூட்டுபிரர்த்தனை நடைபெற்றது .
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் சுப்பிரமணியம் அஞ்சலி உரையுடன் நிகழ்வை நெறிப்படுத்தினார் , தொடர்ந்து ஆசிரியரிடம் கல்விகற்ற மாணவர்கள் உறவினர்கள் என பலர் அஞ்சலி உரை நிகழ்த்தினர் .
கனடா வாழ் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள்
நன்றி உணர்வுடன் ஆசிரியரின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர் .