உசனைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டவரும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய ஓய்வு பெற்ற ஆசிரியருமான திருமதி தெய்வானைப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் நேற்று (28.05.2012) திங்கட்கிழமை உசன் முருகன் பாதடி சேர்ந்தார் .
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம், வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும், பேரம்பலத்தின் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்) அன்பு மனைவியும், கலாநிதி துஷ்யந்தி, (விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), அரவிந்தன் (மருந்தாளர், யாழ். போதனா வைத்தியசாலை), ரகுவிந்தன் (சுவிஸ்), வினோவிந்தன் (வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயும், பேராசிரியர் மிகுந்தன் (விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), சோமினா (ஆசிரியர், முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), ரேணுகா (சுவிஸ்), கமலவேணி ஆகியோரின் அன்பு மாமியும், மிதுறிகா, துமிலன், வக்ஷலன், கேசவி, ஆரபி, ரங்கீத், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.05.2012) புதன்கிழமை பி.ப. 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றோம் . அன்னாரின் ஆத்மா உசன் முருகன் பாதடி அமைய வேண்டுகிறோம்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்- கனடா