அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, May 30, 2012

"மலரஞ்சலி" நிகழ்வு

இறைபதம் எய்திய உசன் இராமநாதன் மகாவித்தியாலய இளைப்பாறிய ஆசிரியை திருமதி தெய்வானைப்பிள்ளை பேரம்பலம் (தங்கம்மா teacher) அவர்களை நினைவுகூருமுகமாக உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களினால் மலரஞ்சலியும்  தொடர்ந்து இரங்கல் கூட்டமும்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: Daily Needs Plaza மண்டபம். 2543 Pharmacy Avenue, Scarborough.
காலம்: ஞாயிற்றுக்கிழமை, June 3, 2012 மாலை 5:30 மணி.
ஆசிரியரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும்  உற்றார் உறவினர்கள் அயலூர் மக்கள் அனைவரையும் 
சமூக முன்னேற்றத்தில் பங்கெடுத்து இன்று எம்மைவிட்டுப் பிரிந்துவிட்ட ஆசிரியைக்கு மரியாதை செலுத்த வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்போடு கேட்டுக்கொள்கிறார்கள்.
தொடர்புகளுக்கு:
கமலாதேவி ஸ்கந்தகுமார் -             905-566-0910      
சரவணமுத்து பத்மகாந்தன் -             647-219-2027      


தகவல் : உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா 


Tuesday, May 29, 2012

"தங்கம்மா டீச்சர்" உசன் முருகன் பாதடி சேர்ந்தார்



          
உசனைப் பிறப்பிடமாகவும்,  திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டவரும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய ஓய்வு பெற்ற ஆசிரியருமான திருமதி தெய்வானைப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் நேற்று (28.05.2012) திங்கட்கிழமை உசன் முருகன் பாதடி சேர்ந்தார் .
 
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம், வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும், பேரம்பலத்தின் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்) அன்பு மனைவியும், கலாநிதி துஷ்யந்தி, (விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), அரவிந்தன் (மருந்தாளர், யாழ். போதனா வைத்தியசாலை), ரகுவிந்தன் (சுவிஸ்), வினோவிந்தன் (வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயும், பேராசிரியர் மிகுந்தன் (விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), சோமினா (ஆசிரியர், முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), ரேணுகா (சுவிஸ்), கமலவேணி ஆகியோரின் அன்பு மாமியும், மிதுறிகா, துமிலன், வக்ஷலன், கேசவி, ஆரபி, ரங்கீத், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.05.2012) புதன்கிழமை பி.ப. 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
                                அன்னாரின் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றோம் . அன்னாரின் ஆத்மா உசன் முருகன் பாதடி அமைய வேண்டுகிறோம். 

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்- கனடா 


Thursday, May 24, 2012

திருமண வாழ்த்துக்கள் ...


ஆசிவாதம் வீதி உசனை சேர்ந்த தில்லை சரவணமுத்து அவர்களின் பேரனும் திரு திருமதி முருகேசு ,நிதி தம்பதிகளின் புதல்வனும் ஹட்டார் நாட்டில் வசித்து வருபவருமான .செல்வன் முரளி அவர்களுக்கும் .
கரவெட்டி திடல் புளியம் போக்கனையைசேர்ந்த திரு திருமதி பேரம்பலம் தம்பதிகளின் புதல்வி பவானி அவர்களுக்கும் மே மாதம் 16 ம் திகதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது .
புதுமணத்தம்பதிகள் சீரும் சிறப்புடனும் வாழ . கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் அனைத்துலக உசன் மக்களும் வாழ்த்துகின்றனர் /.......




திருமண வாழ்த்துக்கள் ...

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தொழில்நுட்ப நிர்வாகியும் உசன் திரு.திருமதி சிவானந்தன் (ஆனந்தன்) சாந்தினி தம்பதிகளின் ஏக புதல்வனுமான செல்வன் செந்தூரன் அவர்களுக்கும்.

கட்டப்பிராய் திரு.திருமதி அரியகுமார் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி செல்வி.சுவர்ணா அவர்களுக்கும். மே மாதம் 21ம் திகதி கனடா டொரோண்டோ நகரில் பெரியோர்களால் மணவாழ்க்கை இணைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. புது வாழ்வில் புதுப்பொலிவுடன் இணையும் புதுமண தம்பதிகளை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் அனைத்துலக உசன் மக்களும் வாழ்த்துகின்றனர். திரு திருமதி செந்தூரன் சுவர்ணா தம்பதிகள் சகல செல்வங்களும் பெற்று வாழ உசன் முருக பெருமான் அருள் புரிவாராக ......









Monday, May 21, 2012

மரண அறிவித்தல்

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், Yakwila, Sri Lanka மற்றும் Scarborough, Canada வை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுவாமிநாதர் இராசநாதன் (இளைப்பாறிய தோட்ட அதிகாரி Yakwila Estate) அவர்கள் 21.05.2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்ற சுவாமிநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைச் சேர்ந்த காலம்சென்ற செல்லப்பா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அமரர் திருமதி அமிர்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், இந்திரனின் பாசமிகு தந்தையும், புஸ்பாவின் அன்பு மாமனாரும் ரொசேன் (Roshen), உதேஷ் (Udesh), நிமேஷ் (Nimesh) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலம்சென்ற விநாசித்தம்பி, சிவபாதசுந்தரம் (Canada), காலம்சென்ற புவனேஸ்வரி, தங்கராசா (London, UK), மகேஸ்வரன் (Canada), விமலேஸ்வரி (சாவகச்சேரி, இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலம்சென்றவர்களான இராசமணி, செல்லத்துரை, செல்வமணி, செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரது பூதவுடல் 3780 Sheppard Avenue East, Scarborough, Canada இல் அமைந்துள்ள Highland Funeral Home இல் 27.05.2012, ஞாயிற்றுக்கிகிழமை மாலை 4 மணி முதல் 9 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் காலை 10 மணி முதல் 12 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, 256 Kingston Road, Scarborough, Canada (Woodbine & Kingston) இல் அமைந்துள்ள St. John's Norway Crematorium இல் பிற்பகல் 12:45 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு
இந்திரன் (மகன்) -416-264-8034 416-835-8147 (Cell)
மகேஸ்வரன்-416-430-0926
சிவபாதசுந்தரம்-416-431-4695
தங்கராசா-647-860-8034 (Cell)


Saturday, May 5, 2012

Summer Get Together 2012

The Summer get together of Usan people will be held on Sunday, July 22, 2012. The event organized by United People Association of Usan in Canada will be at Neilson Park in Scraborough, Canada. The closest intersection of this venue is Neilson Road and Finch Avenue.

United People Association of Usan in Canada cordially invites all people from Usan to attend this community event. People from the adjacent villages of Usan and old students of Usan Ramanathan Maha Viththiyalayam are also welcomed.

There will be sports for all ages. You can also enjoy very tasty foods. Children are encouraged to come prepared to participate in the Fancy Dress show and win fabulous prizes.

Please mark your calendars and keep July 22, 2012 free from any other events. Usan people who live outside of Canada, please make your travel plans accordingly.

It will be an amazing event, guaranteed.



உசன் உறவுகளின் கோடைகால ஒன்றுகூடல்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற கோடைகால ஒன்றுகூடல் July 22, 2012 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கின்றது. Scarborough, Canada வில் Neilson Road and Finch Avenue சந்திக்கு அண்மையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இந்த ஒன்றுகூடல் நடைபெற இருக்கின்றது.

கனடாவாழ் உசன் மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் பரந்து வாழும் உசன் மக்களும் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக இந்த ஒன்றுகூடல் மாறிவிட்டது. அயல் கிராமத்து மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்களையும் அரவணைத்துக் கொண்டு நடாத்தப்படுகின்ற இந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடும், உரிமையோடும் அழைக்கின்றது.

அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகளோடு அறுசுவை உணவும் உண்டு. சிறுவர்கள் வினோத உடைப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறும் சந்தர்ப்பமும் உண்டு.

உங்கள் உறவுகளோடு கூடி மகிழ்ந்திட July 22, 2012 ஆம் திகதியை இப்போதே குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வெளி நாடுவாழ் உசன் மக்களே உங்கள் பிரயாண ஒழுங்குகளை இப்போதே செய்து கொள்ளுங்கள்.

வாருங்கள் அனைவரும். கூடுவோம்! குதூகலிப்போம்!!