உசன் இராமநாதன் மஹா வித்தியாலய கிழக்கு வீதி மதில் புனரமைப்பு நடைபெற்று வருகிறது .இம் முயற்சி கனடா வாழ் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களினால் நிதி உதவி வழங்கி நடைபெற்று வரும் வேளையில் . இம் முயற்சியால் நீண்ட காலமாக இப்பகுதியில் வியாபார நிலையமைத்து வரும் சங்கக்கடைக்கு உரிய பாதை மூடப்படுள்ளது . இதனால் மாணவர்கள் பாதிப்பதுடன் பரம்பரையாக அதில் வியாபாரம் செய்யும்
திரு மனோ அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார் .இது குறித்து அந்த பகுதியில் மாணவர்கள் நலன் கருதி ஒரு பதை அமைக்கும் வேண்டுகோள்;விடுக்கப்பட்டும்அது நிராகரிக்கப்பட்ட நிலையில் . இது குறித்து அனைத்துலக உசன் வாழ் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படுகிறது .
உங்கள் கருத்துகளின் அடிப்படையில்
நீண்ட காலமாக மாணவர்களுக்கு வசதியாக அமைந்த சங்கக்கடை பாதை மூடுவதா ???? இல்லை பரம்பரையாக சேவை செய்துவரும் கடைக்கு பாதை அமைப்பதா ??? உங்கள் வாக்கை பதியுங்கள் ...
www.usan.ca