அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, January 19, 2012

செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரன் அவர்களை "வாழ்த்துகிறோம்"


உசனைச் சேர்ந்த திரு. திருமதி நவரத்தினம் உமாமகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும், கனடாவில் வசிக்கும்  திரு. திருமதி மதீஸ்வரன் ரஜனி தம்பதிகளின் புதல்வியுமான செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரன் அவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி January மாதம் 20 ம் திகதி வெள்ளிக்கிழமை Toronto (Canada) ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.  
திருமதி கமலா சண்முகலிங்கத்தின் மாணவியான செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரன் வாய்ப்பாட்டு ஆசிரியர் தரம் பயின்றதுடன், வயலின், பரதநாட்டியம் ஆகிய கலைகளிலும் சிறந்து விளங்குகிறார். புலம் பெயர் நாட்டில் எமது பாரம்பரிய கலைகளைப் பயில்வதிலும், வளர்ப்பதிலும், உசனைச் சேர்ந்த இளம்தலைமுறை ஆர்வம் கொள்வது பெருமை தருகிறது. 
செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரன் "உசன் உறவுகள்-2011 " நிகழ்வில் இசை, நடன நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
நடக்க இருக்கும் இந்த நிகழ்வில் இசை ஆர்வலர்களையும், உசன் உறவுகளையும் கலந்துகொண்டு பிரதிஷ்னிக்கு உற்சாகம் வழங்குமாறு வேண்டுவதுடன், இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் 
உசன் முருகன் ஆசிகிடைக்கவும் வேண்டுகிறோம்.