அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, December 18, 2012

உசன் உறவுகள் 2012

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமையுடன் வழங்கும் "உசன் உறவுகள் 2012" நிகழ்வு வருகின்ற January மாதம் 19ஆம் திகதி 2013ஆம் ஆண்டு சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. 9116 Bayview Avenue, Richmond Hill, L4B 3M9, ON கனடாவில் அமைந்திருக்கும் SKL Banquet Hall இல் அனைவரையும் கவரும் வண்ணம் இந்த நிகழ்வு இடம்பெறும்.

சிறியவர்கள், இளையவர்கள், பெரியவர்கள், முதியோர் என்று அனைவரும் இந்த நிகழ்வில் விரும்பிக் கலந்து கொள்வது வழமை. இந்த முறையும் அநேகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் என்று முத்தமிழும் சங்கமிக்கும் ஒரு கலை நிகழ்வாக இது அமையும்.

வழமையாக December மாதத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு இம்முறை ஏன் January மாதத்தில் நடத்தப்படுகிறது என்று ஒன்றியத்தின் செயலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனிடம் கேட்டபோது, "December மாதத்தில் வேலைத்தளங்கள் மற்றும் தனியார் ஒழுங்கு செய்யும் Christmas கொண்டாட்டங்கள் பல இடம்பெறுவதால் அநேகமானோருக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வசதிக் குறைவாக உள்ளது. தவிர December மாதத்தில் மண்டபம் பெற்றுக்கொள்வதும் சிரமமான ஒன்று. இதனால் பெரும்பாலானோரின் கருத்துக்களை உள்வாங்கி இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார். இந்த முறை சிறப்பாக ஏதாவது உண்டா என்ற கேள்விக்கு, "இந்த நிகழ்வே ஒரு சிறப்புத்தான். அதற்குள் இன்னொரு சிறப்பும் உண்டு. ஆனால் அதையெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது" என்று பூடகம் போட்டார். "இந்த முறையாவது நிகழ்ச்சிகள் குறித்த நேரத்துக்கு ஆரம்பிக்குமா?" என்றொரு கேள்வியைத் தொடுத்தபோது, "அது எங்கள் கையில் இல்லை. பார்வையாளர்களின் கையில்தான் அது இருக்கிறது. இருந்தாலும் முடிந்தவரை குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க முயற்சிப்போம்" என்றார் அவர்.

"உசன் உறவுகள் 2012" நிகழ்வில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணமாக குடும்பம் ஒன்று $75.00உம், தம்பதிகளானால் $50.00உம், தனி நபர் $25.00உம் செலுத்தவேண்டும். தவிர இதுவரை வருடாந்த அங்கத்துவப் பணமாக குடும்பமொன்றுக்கு $20.00 செலுத்தி இதுவரை அங்கத்தவர்கள் ஆகாதவர்கள் இந்த நிகழ்வில் அதனைச் செலுத்தி அங்கத்தவராகுமாறு ஒன்றியத்தின் பொருளாளர் வெற்றிவேலு அஜந்தன் கேட்டுக்கொள்கிறார்.

இந்த நிகழ்வில் தரமான படைப்புக்களைத் தர விரும்பும் அங்கத்தவர்களும், இந்த நிகழ்வுக்கு அனுசரணை அளிக்க விரும்புபவர்களும் January 5ஆம் திகதிக்கு முன்பாக செயலாளரோடு தொடர்பு கொள்ளவும்.

"உசன் உறவுகள் 2012" இல் கலந்து சிறப்பிக்க கனடா வாழ் உசன் மக்களை மட்டுமல்ல வெளிநாடு வாழ் உசன் மக்களையும், மற்றும் சுற்றுக் கிராம மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.


Wednesday, December 12, 2012

உசனில் உருவாகும் .."முதியோர் நலன் காப்பகம்"


உசனில் காலம் காலமாய் வாழ்ந்த எமது முதியோர்களை அவர்களின் இயலாமைக்காலத்தில் போதிய அடிப்படை வசதிகளும், மருத்துவ, பொழுதுபோக்கு வசதிகளும் நிறைந்த பொதுவான காப்பகம் ஒன்றில் வைத்துப் பராமரிக்கும் தேவை குறித்து அறிந்து கொண்ட நோர்வேயில் வசிக்கும் உசனைச் சேர்ந்த திரு. அம்பலவாணர் ஜெயதேவன் (தேவன்) அவர்கள் தாமாக முன்வந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார் . இது குறித்து கடந்த சில மாதங்களாக கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் உட்பட வெளிநாடுகளிலும், உசனிலும் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி அனைவரின் முழு ஆதரவையும் பெற்ற நிலையில் நேரடியாக உசனுக்கு சென்று கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த நிலையம் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்று எழுத்துமூலமான ஆவணங்களையும் அவர் கையளித்துள்ளார். அது மட்டுமன்றி இந்த முதியோர் நலன் காப்பகத்துக்குரிய ஆரம்பக் கட்டட நிதியைத் தான் பொறுப்பு எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இருப்பினும் இந்த நிலையத்துக்கான நிலத்தினை சமாதி மடம் பகுதியில் தருவதாக உறுதி பெறப்பட்டபோதும் இறுதி நேரத்தில் சில காரணங்களால் அது தடைப்பட்டுப்போனது. தற்போது இந்த பொது முயற்சிக்கு பலரும் ஆதரவு தரும் நிலையில் உசன் மத்திய பகுதியில் கட்டடம் அமைப்பதற்கான நிலம் (காணி ) தேவைப்படுகிறது. இவ்வாறு ஒரு பொதுவான முதியோர் காப்பகம் உசனுக்கு தேவையென பலரும் கருதுவதால் இதனை நிறைவேற்ற அனைவரும் முன்வருமாறு வேண்டுவதுடன் இதனை ஆரம்பித்தால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எமது இந்த முயற்சிக்கு உதவ முன்வருவதாக தெரிவித்துள்ளனர்.

அன்பான அனைத்துலக உசன் மக்களே இந்த நிலையத்தினை அமைக்க உசன் பகுதியில் காணி ஒன்று தேவைப்படுகிறது. எனவே நல்லுள்ளம் கொண்ட யாரவது முன்வந்து இந்த நற்பணி தொடர பங்களிக்குமாறு வேண்டுகிறோம். அது மட்டுமன்றி உங்களால் முடிந்த வரை உங்கள் பங்களிப்பையும் நாடி நிற்கிறோம்.
இந்தப் பணிக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கி இப்பணி நிறைவேற வாழ்த்துகிறது.

தொடர்புகளுக்கு:
தேவன் (நோர்வே) :+4796655555
பாஸ்கரன் (கனடா): +19056865078
நகுலன் (கனடா): +14166189549
சிவானந்தன் (உசன்): +94772877799
Dr. கணேஷ் (உசன்): +94777174446


Wednesday, November 28, 2012

திரு.தம்பையா வைத்திலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்



உசனைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபாலக ஊழியர் திரு தம்பையா வைத்திலிங்கம் அவர்கள் உசனில் காலமானார். நீண்ட காலம் எமது ஊரில் இருந்து சேவையாற்றிய திரு வைத்திலிங்கம் ஐயா அவர்களின் மறைவினால் துயருறும் 
குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு ,
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பாக உசன் முருகனை வேண்டுகிறோம் .

தொடர்புகளுக்கு: சிவானந்தன் உசன் (மருமகன்) -94776544482


Saturday, November 10, 2012

உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்



1924 ம் ஆண்டின் முன்புள்ள காலப்பகுதியில் உசனைச் சேர்ந்த சைவ மக்கள் கற்றுவந்த ஒரேயொரு பாடசாலை மிருசுவில் ரோமன் கத்தோலிக்க பாடசாலையே அதனால் மக்களின் செல்வாக்கும் மதிப்பும் பெற்றவர்களான வைப் பெரியார் உசன் திரு. வி. வைத்திலிங்கம் திரு. பெ. இராமநாதன் மற்றும் பெரியார்களும் ஒன்று சேர்ந்து உசனில் ஒரு சைவ பாடசாலையை நிறுவ வேண்டும் என்று தீர்மானித்து உசன் கந்தசாமி கோவில் தர்மகத்தா திரு. வி. வைத்திலிங்கம் அவர்களின் ஒத்துழைப்புடன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மடத்தில் கல்வி கற்க ஒழுங்கு செய்தனர்.


Tuesday, October 16, 2012

அருள்மிகு புதுக்குளம் அம்மனுக்கு புனருத்தாரணம்

தான் தோன்றி ஈஸ்வரியாய் எழுந்தருளி முக்கிராமத்துக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கும், அருள்மிகு புதுக்குளம் கண்ணகை அம்மன் ஆலய நிர்வாக சபை விடுக்கும் அவசர அறிவித்தல்.
உசன், விடத்தற்பளை, கரம்பகம் ஆகிய முக்கிராமத்து மக்களுக்கும் காலம் காலமாய் அற்புதங்களைக் காட்டி அருள்பாலித்துகொண்டிருக்கும் அருள் மிகு புதுக்குளம் கண்ணகி அம்மன் ஆலயம் கடந்த 10 வருடங்களுக்கு மேல் திருத்தப்படாமல் உள்ளது. ஆலய கட்டிடமும், புதுமை மிகு செந்தமரைக்குளமும் அவசரமாகத் திருத்தப்பட்டு அம்மனின் இருப்பிடத்தைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. அருள் நாயகி புதுக்குளம் அம்மனிடம் அருள் பெற்று வாழும் அனைத்துலக மக்களிடமும் அம்மனுக்காய் உதவி கேட்டு நாடி நிக்கிறோம். அம்மனின் அருட்கடாட்சம் பெற்று அனைத்துலகிலும் வாழும் முக்கிராமத்து மக்களும் அம்மனின் இருப்பையும், அருள் மிகு செந்தாமரைக் குளத்தையும் பராமரிக்கும் உரிமை உங்களுக்கு உரியது என்ற அன்போடு நாம் அறியத் தருவது: மக்களால் அனுமதிக்கப்பட்ட நிர்வாக சபை மற்றும் தர்மகர்த்தா ஊடாக இந்தப் புனருத்தாரணம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்துலகிலும் வாழும் உசன், கரம்பகம், விடத்தற்பளை அடியார்கள் சேர்ந்து இவ்வரும்பணியை நிறைவேற்றுமாறு வேண்டி நிற்கிறோம்.
வெளிநாடுகளில் வாழும் அடியார்களுக்கு அவர்கள் வழங்கும் நிதியுதவிக்கு பதிவு செய்யபட்ட நிர்வாகசபையின் பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
மேலதிக விபரங்களையும் தகவல்களையும் உங்களுக்கு வசதியான கீழ்காணும் நிர்வாக சபை அங்கத்தவர்களிடம் இருந்து பெற்று அம்மனுக்கு உவந்தளிக்குமாறு வேண்டுகிறோம்.
இத்தகவலை ஆலய தர்மகர்த்தா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரசுரிக்கப்படுகிறது .

Bank : Commercial Bank of Ceylon Ltd. - Jaffna
Savings Account No: 8600929480

Joint account holders for trusty:
Dr. K. Manikam
Mr. K.Vimalathas
Mrs. Thayawathy Navakumaran

மேலதிக தொடர்புகளுக்கு:
N. நவக்குமாரன் (தர்மகர்த்தா): 0 94 21 222 2793
Dr. மாணிக்கம் (நிர்வாகசபை): 0 94 60 221 7801 / 0 94 77 958 6888
K. விமலதாஸ்: 094 77 340 0959
N. ரவிக்குமார் (ஐரோப்பா, இத்தாலி): 0 39 01 08367475
N. சிவக்குமார் (கனடா): 1+416-491-0919
S. சாந்தினி (கனடா): 1+905-554-0349


Monday, September 24, 2012

திரு. சிறீஇராமநாதன் அவர்கள் இறைபதம் அடைந்தார்

சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய, தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிராந்திய முகாமையாளர் (ஆனையிறவு) திரு. தில்லையம்பலம் சிறீஇராமநாதன் அவர்கள் September 23, 2012, ஞாயிற்றுக் கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அமிர்தரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும், ஜெகதாம்பிகையின் (ராணி, ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆருயிர்க் கணவரும், சுபோதினி (டென்மார்க்), தர்சினி (கனடா) ஆகியோரின் ஆசைத் தந்தையும், மங்கயற்கரசி, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா (வருமான வரி இலாகா), காசிநாதன் (மானிப்பாய் பல நோக்கக் கூட்டுறவுச் சங்கம் / கனடா), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், கேதீஸ்வரன் (டென்மார்க்), சிவகணேசவேள் (Homelife Future Realty Inc., கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ரஞ்சிதன், சங்கவி, சாம்பவி, கீதன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு:
ராணி (மனைவி), தர்சா (மகள்): 1 + 416-292-5704
சிவா (மருமகன்): 1 + 647-448-6464
காசிநாதன் (துரை, சகோதரன்): 1 + 416-264-9520


Saturday, September 8, 2012

திருமதி சுசீலா சுகுணேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அமெரிக்காவின் Ohio மாநிலத்தின் நுகர்வோர் அதிகார சபையின் ஆளுனர்களில் ஒருவராக திருமதி சுசீலா சுகுணேஸ்வரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தச் சபையில் குடியிருப்பு நுகர்வாளர்களைப் பிரதிநிதுத்துவப்படுத்த உள்ளார்.

Prime Engineering and Architecture, Inc. நிறுவனத்தின் உரிமையாளரான இவர் Asian Indian American Business Group இன் முன்னாள் தலைவராகவும், City of Columbus' Transportation Services Advisory Commission இன் முன்னாள் உறுப்பினராகவும் பணி புரிந்துள்ளார்.

உசன் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தக் கௌரவம் கிடைத்திருப்பது உசன் மக்களுக்குப் பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. உசன் கிராமத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட இவர், தான் வாழும் பிரதேசத்தின் நலனிலும் கரிசனையாக உள்ளார்.

உசன் மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் திருமதி சுசீலா சுகுணேஸ்வரன் அவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

Congratulations Mrs. Susheela Suguness.

Mrs. Susheela Suguness has been appointed to the Ohio Consumers’ Counsel Advisory Board. The Office of the Ohio Consumers’ Counsel (OCC) is the statewide legal representative for Ohio’s residential consumers in matters related to their utility services. The OCC advocates for residential consumers in administrative proceedings before the Public Utilities Commission of Ohio (PUCO), state and federal courts, federal regulatory agencies, and the Ohio General Assembly. The agency also monitors utility companies’ compliance with regulatory standards and educates consumers about utility issues and the services provided by their investor-owned electric, natural gas, telephone and water companies.

Governing board members are appointed by the Ohio Attorney General. Mrs. Suguness has been appointed to represent residential consumers.

Mrs. Suguness is the Owner of Prime Engineering and Architecture, Inc. She is a past president of the Asian Indian American Business Group and a past board member of the City of Columbus’ Transportation Services Advisory Commission. Mrs. Suguness is a registered Professional Engineer and received her B. Tech from the Indian Institute of Technology in Madras, India and her M.S. from the University of Florida.

Please read the news release.

As Mrs. Susheela Suguness hails from Usan, it makes Usan people very proud. United People Association of Usan in Canada congratulates Mrs. Suguness for her great achievement.



Sunday, August 19, 2012

எழுதுமட்டுவாள் மக்களின் ஒன்றுகூடல்

எழுதுமட்டுவாள் மக்களின் ஒன்றுகூடல் இம்மாதம் 25 ஆம் திகதி (25/8/2012) சனிக்கிழமை காலை 9:30 மணி தொடக்கம் மாலை 8:00 மணி வரை Scarborough வில் உள்ள Colonel Danforth Park - Highland Creek Dr. Picnic Area 3 (Kingston Road & Lawson Road)ல் நடைபெற உள்ளது.

எழுதுமட்டுவாள் மக்கள் அனைவரையும் அதனைச் சூழவுள்ள ஒட்டுவெளி, விளுவளை, முகமாலை, கிளாலி, கரம்பகம் ஆகிய ஊர்மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். உங்களின் வருகையை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பாக உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

www.eluthumadduval.org என்ற இணையத் தளத்துக்குச் சென்று மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

எழுதுமட்டுவாள் மக்களின் இந்த முதலாவது ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக அமைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தொடர்புகளுக்கு:
வீ.நடராஜா647-783-2193 / 416-412-1571
கு.சிவராஜா416-893-2377
ராஜம் கார்த்திக்905 970 1815
ராணி கைலன்416-299-8794
பரா416-701-1758


Saturday, August 18, 2012

திரு. கந்தையா நவரத்தினம்

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் (நவம்/துரை - Rtd.Senior Assessor-Inland Revenue Dept & Consultant Rtd.Tax Hirdaramani Of Group Of Companies, Colombo) 17-08-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமுள்ள மகனும்,
இராசநாயகி(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குணரத்தினம்(வட்டக்கச்சி), செல்வரத்தினம்(அச்சுவேலி/லண்டன்), அரியரத்தினம்(உசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோகரன்(University Of Moratuwa/கனடா), முரளிகரன்(University Of Peradeniya), பிரபாகரன்(University Of Peradeniya/University Of Surrey-Uk), உமாகரன்(NIBM/கனடா), லதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திரிவேணி(கனடா), விஸ்ணுஸ்ரீ, குகாஜினி(லண்டன்), கருணா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஓவிகா, ஜீவிகா, சுவாதிகா, நாவலன் ஆகியோரின் மனம்நிறைந்த பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 20-08-2012 திங்கட்கிழமை அன்று பங்களா வீதி மீசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்து வெற்றுடல் சாவகச்சேரி தனங்கினப்பு கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கின்றோம்.

வீட்டு முகவரி :-
பங்களா றோட், மீசாலை, இலங்கை

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசநாயகி(மனைவி) — இலங்கைதொலைபேசி: +94212270144செல்லிடப்பேசி: +94773282122
யசோ(மகன்) — கனடாதொலைபேசி: +14164937084
யசோ(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94773282122
முரளி(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777317712
பிரபா(மகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +441483770152
உமா(மகன்) — கனடாதொலைபேசி: +14164395230


Sunday, July 22, 2012

வெளிவந்து விட்டது "உசன் உறவுகள் 2011" காணொளி


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் 2011 ம் ஆண்டு நடாத்தப்பட்ட  உசன் உறவுகள் கலை நிகழ்வின் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது .
இதனை  "வீடியோ மாருதி"  நிறுவனம்  கனடா வாழ் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளனர் .
உங்கள் பிரதிகளை நாளை நடைபெறவுள்ள ஒன்றுகூடல் நிகழ்வில் பெற்றுகொள்ளலாம். இந்த வீடியோ பிரதியின் இலவச விநியோகம் நாளை மட்டுமே நடைபெறும். உங்கள் பிரதிகளை தவறவிடாதீர்கள் ;
இந்த சேவையை வழங்கும் கனடா உசன்  "வீடியோ மாருதி"  நிறுவனத்திற்கு
எமது மனமார்ந்த நன்றிகள் .


Saturday, July 21, 2012

ஊரோடு உறவாடுவோம்!

இந்த நாளுக்காய்த்தான் இத்தனை நாள் காத்திருந்தோம்!
காத்திருந்த நாள் கைக்கெட்டிய தூரத்தில்............
இன்னும் இருப்பது சிலமணித் துளிகள்தான்!
நாளையை நினைத்தால் நம் மனது சிலிர்க்கிறது!
ஊரோடு ஒன்றாவோம்......... ஒன்றாகிக் களித்திருப்போம்!
வாருங்கள் உறவுகளே! வாருங்கள் நட்புக்களே!
மகிழ்ந்திருப்போம் வாருங்கள்......
மனம் குளிர்வோம் வாருங்கள்!
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் கோடை கால ஒன்றுகூடல்.
July 22, 2012, ஞாயிற்றுக் கிழமை.
Neilson Road and Finch Avenue சந்திக்கு அருகாமையில் Neilson Park இல்.


Thursday, July 12, 2012

கனடாவாழ் உசன் மக்களின் கோடை கால ஒன்றுகூடல் - 2012

காலம்: Sunday, July 22, 2012
நேரம்: காலை 11 மணி முதல்.
இடம்: Neilson Park (Neilson Road and Finch Avenue), Scarborough, ON, Canada.

சிறுவர்களுக்கான வினோத உடைப் போட்டி, அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள், உங்கள் நாவுக்குச் சுவை தரும் உணவு வகைகள்...................

உசன் மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தோடு தொடர்புபட்டவர்களையும், அயல் கிராமத்தவர்களையும் அன்போடு அழைக்கிறோம். உங்கள் உறவுகளோடு கை கோர்த்துக் களித்திருக்க வாருங்கள்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா.



Usan Peoples' Summer Get Together - 2012

Date: Sunday, July 22, 2012
Time: Starting at 11 a.m. ET.
Venue: Neilson Park (Neilson Road and Finch Avenue), Scarborough, ON, Canada.

Fancy dress competition for children, Sportsmeet for all ages, different varieties of foods.

We invite all people from Usan, anyone has studied at usan Ramanathan Maka Viththiyaalayam and people from srounding villages.

Come and join hands with your relatives and friends. It will be a funfilled day!

United People Association of Usan in Canada.


Monday, July 2, 2012

"உசனில் இருந்து உருவாகினார் இன்னுமொரு Dr"

உசனைச் சேர்ந்த நவரத்தினம் உமாமகேஸ்வரி தம்பதிகள் மற்றும் தனங்கிளப்பை சேர்ந்த விஸ்வநாதன் பகவதி தம்பதியரின் பேத்தியும், தேவபாலன் சரோஜினி தம்பதியரின் புதல்வியுமான Dr.கஸ்தூரி விஸ்வநாதன் அவர்கள் கனடாவில் உள்ள University of waterloo  இல் Doctor of optometry , and Honours  Biomedical Sciencesஆகிய இரு துறைகளிலும் பட்டம் பெற்றுள்ளார்.அத்துடன் இவர் Scarborough,  Downtown  ஆகிய பகுதிகளில் தனது சேவையையுமஆரம்பித்துள்ளார் 
கஸ்துரி அவர்கள் அவரது குடும்ப உறவுகளுடன் சேர்ந்து உசன் மக்களின் நிகழ்வுகளில் ஆர்வம கொண்டிருப்பவர்.அவர் பெற்றிருக்கும் பட்டத்திற்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் நாம் பெருமை கொள்கிறோம் .உசனில் இருந்து புலம்பெயர்ந்த மக்களில் இளைய சமுதாயத்தினர் தற்சமயம் பலதுறைகளில் வெற்றி பெற்றுவருகின்றனர். அதில் இன்று Dr.கஸ்தூரி விஸ்வநாதன் அவர்களும் பதிவுசெய்து கொள்கிறார். இவர் தொடர்ந்து முன்னேறி வீட்டுக்கும் நாட்டுக்கும் உசனுக்கும் சேவை வழங்க வேண்டுமென வாழ்த்துகிறோம். 
Dr. Casthoory Viswanathan, daughter of Thevabalan Viswanathan and Sharogene Thevabalan (Usan) has successfully graduated as a Doctor of Optometry and Honours Biomedical Sciences at the University of Waterloo. She will be practicing with other Optometrists in Scarborough and Downtown Toronto. 
Congratulations and we wish Dr. Casthoory the best for her bright future.




Saturday, June 23, 2012

உசன் இராமநாதன் மகா வித்தியாலய பெறுபேறு -2011

2011 அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் வருடாந்த க .பொ.தா சாதாரண தரம் 
மற்றும் உயர்தர பரீட்சையில் .உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தில் இருந்து தோற்றிய மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன கடந்த காலங்களில் உசனில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற காரணத்தால் 
குறைவடைந்த மாணவர் தொகை தற்போது  மீண்டு அதிகரித்து வரும் இத்தருணத்தில் . உசனில் படித்து வரும் மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்கவேண்டியது நம் கடமையாகும் .




Thursday, June 7, 2012

பண்டிதர் சின்னத்தம்பி சரவணமுத்து அவர்களின் ஓராண்டு நிறைவாஞ்சலி!



பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் திரு சின்னத்தம்பி சரவணமுத்து அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டு ஒன்று ஓடிவிட்டது. காலம் எவ்வளவு விரைவாக எம்மைக் கடந்து செல்கிறது! அன்னாரின் பிரிவு நேற்றுபோல் இருக்கிறது. தாங்க முடியாத இழப்பை எப்படியோ தாங்கிக் கொண்டு அவரின் நினைவுகளோடு ஒன்றிப்போய் இருக்கிறோம். இந்த ஓராண்டு நிறைவில் அவர் தம்மை நினைவு கொள்கிறோம்!

-குடும்பத்தினர்.

ஓராண்டு உருண்டோட உம்நினைவில் நாமுள்ளோம்.
ஊரார் உவந்துரைக்கும் உத்தமனாம் பண்டிதரே!
தாராள சிந்தனையில் தரணியுள்ளோர் பெருவாழ்வில்
பாராண்ட மன்னர்போல் பத்திராமாய்ப் பணிசெய்தீர்!

உங்கள் பிள்ளைகளாய் உலகினிலே சிறப்பாக
எங்கள் வாழ்வமைய என்ன தவம் செய்துவிட்டோம்!
தங்கள் மனைவியாகத் தவம் செய்தேன் நாயகனே
பங்காளர் மருமக்கள் பேரரெனப் பெருமை கொண்டோம்!

சிவலோகச் செந்நெறியில் சேரவென்று சேவித்தோம்.
பரலோக பாக்கியங்கள் பௌத்திரமாய்ப் பெற்றுடுவீர்!
திரிலோக நாயகனாம் சிவன் தாளில் சேர்ந்திருப்பீர்
புவிலோக நம்வாழ்வில் நினைத்திருப்போம் எந்நாளும்!

ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!


Monday, June 4, 2012

நன்றி உணர்வுடன் நடைபெற்ற "மலரஞ்சலி" நிகழ்வு

 உசன் இராமநாதன் மகா வித்தியாலய நீண்டகால ஆசிரியை தங்கம்மா டீச்சர் அவர்களுக்கு . கனடா வில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது
 உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் உசன் மக்கள் அயலூர் மக்கள் மற்றும் உறவினர்கள் இம் மலரஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய தலைவர் திரு கனகசபை நகுலன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் .அதனை தொடர்ந்து அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டி
கூட்டுபிரர்த்தனை நடைபெற்றது .
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் சுப்பிரமணியம் அஞ்சலி உரையுடன் நிகழ்வை நெறிப்படுத்தினார் , தொடர்ந்து ஆசிரியரிடம் கல்விகற்ற மாணவர்கள் உறவினர்கள் என பலர் அஞ்சலி உரை நிகழ்த்தினர் .
கனடா வாழ் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள்
நன்றி உணர்வுடன் ஆசிரியரின் படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தினர் .


























Saturday, June 2, 2012

உசன் தங்கம்மா டீச்சர் அவர்களின் இறுதி கிரிகை நிகழ்வின் சில நிமிடம்

உசன் தங்கம்மா டீச்சர் அவர்களின் இறுதி கிரிகை நிகழ்வின் சில நிமிடம்



Wednesday, May 30, 2012

"மலரஞ்சலி" நிகழ்வு

இறைபதம் எய்திய உசன் இராமநாதன் மகாவித்தியாலய இளைப்பாறிய ஆசிரியை திருமதி தெய்வானைப்பிள்ளை பேரம்பலம் (தங்கம்மா teacher) அவர்களை நினைவுகூருமுகமாக உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களினால் மலரஞ்சலியும்  தொடர்ந்து இரங்கல் கூட்டமும்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: Daily Needs Plaza மண்டபம். 2543 Pharmacy Avenue, Scarborough.
காலம்: ஞாயிற்றுக்கிழமை, June 3, 2012 மாலை 5:30 மணி.
ஆசிரியரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும்  உற்றார் உறவினர்கள் அயலூர் மக்கள் அனைவரையும் 
சமூக முன்னேற்றத்தில் பங்கெடுத்து இன்று எம்மைவிட்டுப் பிரிந்துவிட்ட ஆசிரியைக்கு மரியாதை செலுத்த வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்போடு கேட்டுக்கொள்கிறார்கள்.
தொடர்புகளுக்கு:
கமலாதேவி ஸ்கந்தகுமார் -             905-566-0910      
சரவணமுத்து பத்மகாந்தன் -             647-219-2027      


தகவல் : உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா 


Tuesday, May 29, 2012

"தங்கம்மா டீச்சர்" உசன் முருகன் பாதடி சேர்ந்தார்



          
உசனைப் பிறப்பிடமாகவும்,  திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டவரும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய ஓய்வு பெற்ற ஆசிரியருமான திருமதி தெய்வானைப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் நேற்று (28.05.2012) திங்கட்கிழமை உசன் முருகன் பாதடி சேர்ந்தார் .
 
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம், வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும், பேரம்பலத்தின் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்) அன்பு மனைவியும், கலாநிதி துஷ்யந்தி, (விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), அரவிந்தன் (மருந்தாளர், யாழ். போதனா வைத்தியசாலை), ரகுவிந்தன் (சுவிஸ்), வினோவிந்தன் (வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயும், பேராசிரியர் மிகுந்தன் (விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), சோமினா (ஆசிரியர், முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), ரேணுகா (சுவிஸ்), கமலவேணி ஆகியோரின் அன்பு மாமியும், மிதுறிகா, துமிலன், வக்ஷலன், கேசவி, ஆரபி, ரங்கீத், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.05.2012) புதன்கிழமை பி.ப. 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
                                அன்னாரின் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றோம் . அன்னாரின் ஆத்மா உசன் முருகன் பாதடி அமைய வேண்டுகிறோம். 

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்- கனடா 


Thursday, May 24, 2012

திருமண வாழ்த்துக்கள் ...


ஆசிவாதம் வீதி உசனை சேர்ந்த தில்லை சரவணமுத்து அவர்களின் பேரனும் திரு திருமதி முருகேசு ,நிதி தம்பதிகளின் புதல்வனும் ஹட்டார் நாட்டில் வசித்து வருபவருமான .செல்வன் முரளி அவர்களுக்கும் .
கரவெட்டி திடல் புளியம் போக்கனையைசேர்ந்த திரு திருமதி பேரம்பலம் தம்பதிகளின் புதல்வி பவானி அவர்களுக்கும் மே மாதம் 16 ம் திகதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது .
புதுமணத்தம்பதிகள் சீரும் சிறப்புடனும் வாழ . கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் அனைத்துலக உசன் மக்களும் வாழ்த்துகின்றனர் /.......




திருமண வாழ்த்துக்கள் ...

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தொழில்நுட்ப நிர்வாகியும் உசன் திரு.திருமதி சிவானந்தன் (ஆனந்தன்) சாந்தினி தம்பதிகளின் ஏக புதல்வனுமான செல்வன் செந்தூரன் அவர்களுக்கும்.

கட்டப்பிராய் திரு.திருமதி அரியகுமார் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி செல்வி.சுவர்ணா அவர்களுக்கும். மே மாதம் 21ம் திகதி கனடா டொரோண்டோ நகரில் பெரியோர்களால் மணவாழ்க்கை இணைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. புது வாழ்வில் புதுப்பொலிவுடன் இணையும் புதுமண தம்பதிகளை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் அனைத்துலக உசன் மக்களும் வாழ்த்துகின்றனர். திரு திருமதி செந்தூரன் சுவர்ணா தம்பதிகள் சகல செல்வங்களும் பெற்று வாழ உசன் முருக பெருமான் அருள் புரிவாராக ......