அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, December 25, 2011

உசன் உறவுகள்-2011 நிகழ்வின் பதிவு

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட உசன் உறவுகள் 2011 
நிகழ்வு கனடா வாழ் உசன் மக்களின் பெரும் பங்களிப்புடன் மிக சிறப்பான கலை நிகழ்வாக அமைந்திருந்தது . பல உறவுகள் தாமாக முன்வந்து  உதவிகளும் பங்களிப்பும் வழங்கியிருந்தனர் . தொடர்ந்து வரும் காலங்களில் இன் நிகழ்வு இன்னும் சிறப்புடன் அமைய அனைத்து உசன் மக்களையும் ராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களையும் பங்களிக்குமாறு அன்புடன்  வேண்டி நிக்கிறோம் .
நிகழ்வின் சில பதிவு ..........
தயாரிப்பு : நகுலன் இளையதம்பி


Monday, December 19, 2011

"உசன் உறவுகள் 2011"

கனடா வாழ் உசன் மக்களின் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பெருமையுடன் வழங்கிய "உசன் உறவுகள் 2011 " நிகழ்வு மிகவும் சிறப்புடன் நடைபெற்றது 
இம் முறை இளையசமுதாயத்தின் பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது .
மார்க்கம் நகரில் அமைந்திருந்த மண்டபத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.தயானந்த சோதி அவர்கள் மங்கள விளக்கேற்ற நிகழ்வு சிறப்புடன் ஆரம்பமாகியது.





Saturday, December 17, 2011

இன்று கனடாவில் உசன் உறவுகள் - 2011

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமையுடன் வழங்கும் உசன் உறவுகள் - 2011 நிகழ்வு இன்று  December 17, 2011 அன்று நடைபெற உள்ளது நீங்கள் அறிந்ததே. இந்தச் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரயும் அன்போடு அழைக்கிறோம்.

இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சி வழங்க விரும்புபவர்கள் செயலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனோடு December 10, 2011 ஆம் திகதிக்கு முன்பு தொடர்பு கொண்டு விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு வழங்குவதற்கு அன்பளிப்புப் பொருட்கள், door prize மற்றும் lotto prize என்பனவற்றையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இவற்றை வழங்க விரும்புபவர்களும் செயலாளரோடு தொடர்பு கொள்ளவும்.

நன்றி.


United People Association of Usan in Canada proudly presents "Usan Uravukal - 2011. This special event will be held on December 17, 2011. We cordially invite all Usan citizens to come and enjoy the entertainments.

Anyone who wishes to perform at this event, kindly contact Secretary Subramaniam Baskaran before December 10, 2011 and provide the details.

We request you to donate gifts for boys and girls under 10 years of age. We also looking for well wishers and sponsors to offer gifts for the door prize and lotto prizes. Those who are interested, please contact the Secretary.

Thank you.


Tuesday, December 6, 2011

திருமதி.அன்னப்பிள்ளை குலசேகரம் அவர்களின் மரண அறிவித்தல் .


௦விடதற்பளையை சேர்ந்த திருமதி.அன்னப்பிள்ளை குலசேகரம்அவர்கள் டிசம்பர் மாதம் 2 ம திகதி இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார் .விடத்தல்பளை கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும் ௦குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும் .
உசன் சரவணமுத்து (சாமியார்)நாகமுத்து தம்பதிகளின் மூத்த மருமகளும்,
தவமணிதேவி (சுவிஸ்),பராசக்தி(பரா), குணபாலசிங்கம்(குணா கனடா),சிவஞானம்(சிவா -மீசாலை ) ,வெற்றிவேல்(ராசா-அல்லாரை),நவமநிதேவி (நவா-ஆசிரியை ) கணேசலிங்கம் (சுவிஸ்)ஞானாம்பிகை(ஞானா-ஆசிரியை) ஞானவடிவேல் -செல்வா (சுவிஸ்)ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
கந்தையா (CTB நடத்துனர்) உசன் செல்லம ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலம்சென்ற உமாமகேஸ்வரன்(தும்பளை),பத்மநாதன்(மீசாலை),கமலாதேவி(கனடா)பேபி(மீசாலை ),மீனாட்சி,சிவஞானலிங்கம்(சிவா-CTB) பிரேமி (சுவிஸ்)தேவபாலன்(சங்கத்தானை),கலைவாணி (சுவிஸ்)ஆகியோரின் நேசமிக்க மாமியாரும்.
அமரர் :உசன் பண்டிதர் சரவணமுத்து ,VIN மகாலிங்கம் (கனடா )ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்
நந்தினி,துஷ்யந்தன்,பத்மஜா,சாதனா,பவித்திரா,சங்கர்,ராகுலன்,பிரபா,வர்சிகா,தர்சிகா,ஓவியா,யுமேஸ் ,யதுசா,யாதவன்,கிஷ்ணாஜினி,கஜானி ,கஜன் வைஷ்ணவி,தம்பி,ஆகியோரின் அன்பு பேத்தியும்,ஜஷ்மினி,ராஜீவ் ஆகியோரின் பூட்டியுமாவர் .
அன்னாரின் ஈமகிரிகைகள் டிசம்பர் மாதம் 3 ம திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சங்கதானையில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது .இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தகவல் .
பிள்ளைகள் :
தேவி ,நந்தினி (சுவிஸ்)-0041714635591
பரா (மீசாலை)                  -௦௦௦௦0094775296254
குணா கமலா (கனடா)-0014164217348
சிவா (மீசாலை)      -0094777484321
ராசா (அல்லாரை) 0094775023418
நவா (மீசாலை)   0094772285112
கணேஷ் (சுவிஸ்)0041816332841
ஞானா -0094777166343
செல்வா (சுவிஸ்) 0041216471943







Monday, December 5, 2011

தண்ணி....மேடை நாடகம் ....

கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன கலைக்கூடம் வழங்கிய தண்ணி ...நாடகம் இதில் உசனை சேர்ந்த



Sunday, December 4, 2011

உசனில் நடைபெற்ற பாராட்டு விழா ..காணொளி

உசன் மக்களுடன் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் இணைந்து எமது கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் கல்வி சமய கலாச்சார வளர்ச்சிகளுக்கு தமது வாழ் நாளில் பங்களிப்பு செய்த பெரியோரை கௌரவிக்கும் விழா மிக சிறப்பாக நடை பெற்றது .இந்த விழாவின் சில பகுதி காணொளி ...


நன்றி :Dr.Mikunthan


அதிசய ..மலிவு விற்பனை ...


உங்கள் இல்லங்களுக்கு மெருகூட்ட கூடிய அழகிய ... அதிசய வகையிலான சுவர் ஓவியங்கள் ..மிக மிக மலிவு விலையில் பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் உள்ளது . புகழ் பெற்ற கலைஞர்கலால் வரையப்பட்ட கைவண்ண ஓவியங்களும் மிக மிக மலிவிலையில் விசேடமாக விற்பனை  செய்யபடுகிறது.
நிறுவனங்களில் அதிக விலைக்கு விற்கப்படும் இந்த ஓவியங்கள் நீங்கள் நம்பமுடியாத விலையில் பெற்றுக்கொள்ளலாம் . உங்கள் உறவினர் நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க கூடிய சிறப்பான அம்சங்கள் உள்ளன .
டிசம்பர் மாதம் 13 ம திகதி வரை மட்டுமே இந்த சந்தர்ப்பம் ......
மார்க்கம் அண்ட் ஸ்டில்ஸ் சந்திப்பில் 3351 Markham Road Unit-122 (Red Building)