அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, November 23, 2011

உசன் உறவுகள் - 2011


கனடா வாழ் உசன் மக்களின் குளிர்கால ஒன்றுகூடல், உசன் உறவுகள் - 2011, நடைபெறுவதற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. December 17, 2011, சனிக்கிழமை இந்தச் சிறப்பு நிகழ்வு இடம்பெற உள்ளது. 9116 Bayview Avenue, Richmond Hill, L4B 3M9, ON இல் அமைந்திருக்கும் SKL Banquet Hall இல் மிகச் சிறப்பாக, அனைவரையும் கவரும் வண்ணம் இந்த நிகழ்வு இடம்பெறும்.

இந்த நிகழ்வு குறித்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் கனகசபை நகுலன் அவர்களிடம் கேட்டபோது, "இந்த வருட உசன் உறவுகள், கனடாவாழ் உசன் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நிர்வாகசபை உறுப்பினர்களின் ஏகோபித்த ஒத்துழைப்போடு, ஒன்றிய உறுப்பினர்களின் பங்களிப்பும் தனக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார். "இந்த நிகழ்வு குறித்து கனடாவாழ் உசன் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?" என்ற கேள்விக்கு தனது வழமையான சிரிப்போடு, "எல்லோரும் நேரத்துக்கு வந்து, கூடிக் குலாவி, மகிழ்ந்திருக்கக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிட வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள்" என்றார்.

அனைத்து வயதினருக்குமான கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற இருக்கின்றன. இந்த நிகழ்வில் தரமான கலை நிகழ்ச்சிகள் வழங்க விரும்புபவர்கள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும். நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுக்களில் இருந்து குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படும் ஒரு சீட்டுக்குத் தரமான பரிசு வழங்கப்படும். வழமையான அதிர்ஷ்டம் பார்க்கப்படும் சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு மூன்று பரிசுகள் வழங்கப்படும். இவை தவிர சிறுவர்களுக்கும் அன்பளிப்பு வழங்கப்படும்.
நாவுக்குச் சுவையாக இராப்போசனமும் வழங்கப்படும்.

உசன் மக்கள் அனைவரும் இந்த நாளை இந்த நிகழ்வுக்காக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கேட்டுக்கொள்கிறது.