அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, September 11, 2011

உசனில் சிறப்பாக நடைபெற்ற பாராட்டு விழா


நீண்ட காலமாக உசன் கிராமத்தின் கல்வி சமய கலாச்சார பொருளாதார வளர்ச்சிக்காக அயாராது உளைத்த பெரியவர்களை கௌரவிக்கும் முகமாக
உசன் மக்களும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் இணைந்து கடந்த சனிக்கிழமை உசனில் பாராட்டு விழாவை திறம்பட நாடத்தியிருன்தனர்.


உசன் கிராம வளர்ச்சியில் பங்கெடுத்த உசன் இராமநாதன் மஹா வித்தியாலய
அதிபர் ஆசிரியர் திரு சரவணபவன்-சிற்பி அவர்களுக்கும் ,
உசன் அதிபர் தென்மராட்சி உதவி கல்வி பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற திரு க.பேரம்பலம் அவர்களுக்கும் , மாவட்ட சுகாதார பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற திரு மாணிக்கம் அவர்களுக்கும் உசன் மக்களால் கௌரவமும பாராட்டும் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் இருந்து கல்விமான்கள் அதிகாரிகள் பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் . இன் நிகழ்வை உசன் மக்களுடன் உசன் வாலிபர்கள் முன்னின்று சிறப்பாக நடாத்தி முடித்திருந்தனர் . உசனுக்காய்  உழைத்த பெரியவர்களுக்கு நன்றி கூறும் இன் நிகழ்வுக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது .
படங்கள் :துஸ்யந்தி மிகுந்தன்