கனடா வாழ் உசன் மக்களின் இந்த ஆண்டுக்கான கோடை கால ஒன்று கூடல் மிக சிறப்பாக நடைபெறவும் .உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் நிதி வளர்ச்சிக்காகவும் டொரோண்டோ வாழ் வர்த்தகர்கள் சிலர் பணமாகவும் பொருளாகவும் வாரிவழங்கி தமது ஆதரவை தந்தனர் .
அந்தவகையில் Tech Source நிறுவனத்தின் Scarborough கிளை அதிபர் திரு மோகன் அவர்கள் உசன் மக்களுக்காக புத்தம் புதிய மடி கணணி (Laptop) ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார் .
இதை விட JBN Auto Sales நிறுவன அதிபர் உசன் கருனி அவர்கள் ,மற்றும்
White House Travals நிறுவனம் ,Samy and Sonse ,Vip Gift and CD Store ,வீடு விற்பனை முகவர்களான உசன் சிவகரன் வேலுப்பிள்ளை , குலசெகரம்பிள்ளை சிவராசா
ரமணன் ராமச்சந்திரன் ,Mega Fainancial ஜெயக்குமார் ,ரூபன் ஒப்பிலாமணி ,
ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கி இன் நிகழ்வு சிறப்புற நடைபெற உதவினர் பெறப்பட்ட பொருட்கள்அன்றைய தினம் உசன்மக்கள் மத்தியில் ஏலத்தில் விடப்பட்டு சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது.இதை விட வழமை போன்று இவ்வருடமும் வினோத உடை போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசினை திரு.சிவபதம் அவர்கள் வழங்கியிருந்தார் .
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .