கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் 2011 ம் ஆண்டுக்கான கோடை கால ஒன்று கூடல் மிக சிறப்பாக நடைபெற்றது.உசன் இரமானதான் மஹா வித்தியாலய பழைய மாணவனான MEGA Fainancial முகவர் ஜெயக்குமார் அவர்களின் மங்கள விளக்கேற்றலுடனும் ஸ்ரீ ஹரி குருக்கள் அவர்களின் ஆசி பூசைஉடனும் ஆரம்பமான நிகழ்வு விளையாட்டு போட்டி, பலவகை உடனடி உணவு தயரிப்புகளுடனும் சிறப்பாக நகர்ந்தது .பெருமளவு உசன் மக்களும் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர் .
இம்முறை சிறப்பு நிகழ்வாக சங்கத்தின் நிதி வளர்ச்சிக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்ட போது மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். சிறப்பாக இன் நிகழ்வில் UK லண்டன் ல் இருந்து
உசனை சேர்ந்த சிவபாதம் பவன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார் . விளையாட்டு போட்டியை சிறப்பிக்கும் வகையில் கயிறுழுத்தல் போட்டி நடைபெற்றது .
இன் நிகழ்வை Shanshin Photo இளையதம்பி நகுலன் அவர்களின் கேமரா பதிவாக்கி கொண்ட சில காட்சிகளை
இந்த இணைப்பில் காணலாம் .