உசனிலும் வன்னியிலும் போரினால் பாதிக்க பட்ட மக்களுக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால்சேர்க்கபட்ட உடைகளை பாதுகாப்பாய் பொதி செய்யும் பணியில் இன்று கனடா வாழ் உசன் இளம் சமுதாய
வாலிபர்கள் மிகவும் உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.
உசன் உமாபதி அவர்களின் இல்லத்தில் பொதி செய்யும் பணி நடைபெற்ற போது அவரின் பிள்ளைகளும் உசன் நவரத்தினம் சிவகுமார் அவர்களின்
பிள்ளைகளும் தாமாக முன்வந்து இந்த அரும் பணியை சிறப்பாக செய்து முடித்தனர். இப்பணி சிறப்பாக அமைய உழைத்ததுடன் தனது வீட்டில் இடம் ஒதுக்கித்தந்த திரு ராஜரத்தினம் உமாபதி அவர்களுக்கும்
உசன் மக்கள் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று தமாக முன்வந்து உதவியமைக்காக இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த உதவி பொருட்கள் இன்னும் சில தினங்களின் கப்பலில் ஏற்றபடவுள்ளது.